மே 28ம் தேதியை என்னால் மறக்கவே முடியாது, அன்று தான் அப்பாவை...: சவுந்தர்யா ரஜினிகாந்த் உருக்கம்
Recommended Video

சென்னை: மே 28ம் தேதியை மறக்கவே முடியாது என்று சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள காலா படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிட்பட்டது.
ட்ரெய்லர் தொடர்பான தனுஷின் ட்வீட்டை பார்த்த சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டது.
சிங்கப்பூர்
28.5.2011 என்ன ஒரு நள்... நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அந்த நாளில் தான் அப்பாவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் சென்றோம்...கடவுளின் அருளால் அவர் சில நாட்களிலேயே குணமடைந்து திரும்பி வந்தோம். உங்களின் பிராத்தனைகளுக்கு நன்றி... 7 ஆண்டுகள் கழித்து இது உங்களின் அன்புக்காக என்று ட்வீட்டியுள்ளார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
நலம்
சித்தர் பக்தரான ரஜினிக்கு அழிவே இல்லை என்று ஒருவர் சவுந்தர்யாவுக்கு பதில் அளித்துள்ளார்.
மறக்க முடியாது
உங்களால் மட்டும் அல்ல எங்களாலும் அந்த நாளை மறக்கவே முடியாது என்று ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
காலா
உங்களின் அப்பா தமிழக முதல்வர் ஆக லாயக்கில்லாதவர் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











