ஹீரோக்களுடன் படுக்கையை பகிர மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தேன்.. கமல் பட நடிகை பகீர் குற்றச்சாட்டு!
சென்னை: பிரபல நடிகையான ரவீணா டாண்டன் தான் ஹீரோக்களுடன் படுக்கையை பகிர மறுத்ததால் பல படங்களின் வாய்ப்பை இழந்ததாக பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான ரவீணா டாண்ட்டன், 1990களில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். தில்வாலே, அன்டாஸ் அப்னா அப்னா, துல்ஹே ராஜா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்.
இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடா என தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார் நடிகை ரவீணா டாண்டன்.

கமலுடன் ஆளவந்தான்
அர்ஜூனுடன் சாது என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுடன் ஆளவந்தான் படத்தில் நடித்தார். தொடர்ந்து இந்தி படத்தில் நடித்து வந்த ரவீணா டாண்டனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

கேஜிஎஃப் 2
இந்தியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். பின்னர் கிடைத்த ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் கே.ஜி.எப். படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்கிறார் ரவீணா டாண்டன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வருகிறது.

காட்ஃபாதர்கள் இல்லை
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை ரவீணா டாண்டன் பாலிவுட் குறித்தும் அதன் மோனோபோலி குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியிருப்பதாவது, "எனக்கு காட்ஃபாதர்கள் இல்லை, குரூப்களிலும் ஆளாக இல்லை, என்னை ஊக்குவிக்கும் ஹீரோக்களும் இல்லை.

படுக்கையை பகீரவில்லை
நான் படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக ஹீரோக்களுடன் படுக்கவில்லை அல்லது அஃபையர்களையும் கொண்டிருக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் நான் திமிர் பிடித்தவளாகக் கருதப்பட்டேன். ஏனென்றால் ஹீரோக்கள் விரும்பியதை நான் செய்யவில்லை.

நான் ஒத்துப்போகவில்லை
அவர்கள் சிரிக்க வேண்டும் என்று விரும்பும் போது நான் சிரிக்க வேண்டும், அவர்கள் உட்கார வேண்டும் என்று விரும்பும் போது உட்கார வேண்டும் என்று எதிர்பார்த்தனர். நான் அதற்கு ஒத்துப் போகவில்லை. சில பெண் பத்திரிக்கையாளர்களும் எனக்கு எதிராக கட்டுரைகளை வெளியிட்டனர். சில நடிகர்களின் கைக்கூலிகளாக அவர்கள் இருந்தனர்.

பெரிய ஏமாற்றம்
அது எனக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. சிலரின் ஈகோவால் அடிக்கடி என்னைப் பற்றி தவறான கட்டுரைகள் வெளி வந்தன. சில ஹீரோக்களுடன் சேர்ந்து தன்னைப் பற்றி தவறான கட்டுரைகளை எழுதியவர்கள் இப்போது தங்களை பெண்ணியவாதிகள் என கூறி கொள்கின்றனர்.

பெயருக்கு களங்கம்
ஹீரோக்களுடன் படுக்கையை பகிர மறுத்ததாலும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றாமல் இருந்ததால் பல படங்களின் வாய்ப்பை இழந்தேன். மாறாக நேர்மையாக இருந்ததால் பெயருக்கு களங்கமும் அழுக்கும்தான் வந்து சேர்ந்தது என்றும் நடிகை ரவீணா டாண்டன் உருக்கமாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications