கற்றது தமிழ் படத்தால் 2 கோடி நஷ்டம்..ஆனால், மனதிருப்தி இருக்கு.. நடிகர் கருணாஸ்!

சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில், ஜீவா, அஞ்சலி நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் கற்றது தமிழ். இத்திரைப்படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் இருந்தாலும், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதுகுறித்து பேசிய நடிகர் கருணாஸ், கற்றது தமிழ் படத்தால், 2 கோடியே 20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு சூர்யா நடித்த நந்தா படத்தின் மூலம் லொடுக்கு பாண்டி கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் கருணாஸ். முதல் படத்திலேயே தனது காமெடியால் மக்களை ஈர்த்த கருணாஸ் நடிப்பில் அடுத்தடுத்து கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் கமிட்டானார். திருடா திருடி, படிக்காதவன் மற்றும் பல படங்களில் இவர் பேசிய நகைச்சுவை டயலாக் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Kattradhu Thamizh film lost Rs 2 crore actor Karunas talks

நடிகர் கருணாஸ்: நகைச்சுவை நடிகராக வலம் வந்த கருணாஸ், 'திண்டுக்கல் சாரதி' படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். அந்த படம் அவருக்கு ஒரளவு வரவேற்பை கொடுத்தது. அதன்பின் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடித்தார். அதன் பின் பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார் கருணாஸ்.

போகுமிடம் வெகுதூரமில்லை: இந்நிலையில், 'போகுமிடம் வெகுதூரமில்லை'. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கருணாஸ், இப்படத்தின் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தலைப்புக்குள் கதையை இயக்குநர் வைத்திருக்கிறார். கலைக்கு மொழி தேவையில்லை. அன்பும் காதலும் இருந்தால் போதும் கலை அழகாக வளர்ந்து கொண்டே இருக்கும். மேலும் நான், சினிமாவில் எந்த ஹீரோவின் முதல் படத்தில் நடித்தாலும், அது கவனிக்கத்தக்க படமாக இருந்துள்ளது. அஜித்துடன் வில்லன், விஜய்யுடன் திருமலை என எனக்கும் அந்த படத்துக்கும் ஹெல்த்தியாக அமைந்துள்ளது. ஒரு படத்தில் ஒரு கதாபாத்திரம் நாம்தான் நடிக்க வேண்டும் என்று விதி இருந்தால் யாராலும் மாற்ற முடியாது.

ரூ.2 கோடி நஷ்டம்: நானும் கொரோனாவில் அடிபட்டவன்தான். திண்டுக்கல்லில் ஹோட்டல் தொடங்கி 2 கோடி ரூபாய் போய்விட்டது. அதே போல, கற்றது தமிழ் படத்தை நான் வாங்கி தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டேன், அப்போது எனக்கு 2 கோடியே 20 லட்சம் ரூபாய் நஷ்டம், ஆனால், தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல இயக்குநர், நல்ல நடிகையை அறிமுகப்படுத்திய ஆத்ம திருப்தி இருக்கிறது என்று கருணாஸ் அந்த நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X