தனுஷ் ஹீரோயின் சொல்வதை பார்த்தால் நடிகையாக இருப்பது ரொம்ப கஷ்டம் போல
Recommended Video

மும்பை: சினிமா படங்களில் நடிப்பது குறித்த உண்மையை தெரிவித்துள்ளார் அமிரா தஸ்தூர்.
இஷாக் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அமிரா தஸ்தூர். தனுஷின் அனேகன் படம் மூலம் கோலிவுட் வந்தவர் அப்படியே டோலிவுட் பக்கமும் சென்றார்.
இந்நிலையில் பாலிவுட் பற்றி அவர் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

வாரிசுகள்
சினிமா பின்னணி இல்லாமல் வருபவர்களை விட பிரபலாமனவர்களின் பிள்ளைகளுக்கு முதல் பட வாய்ப்பு எளிதில் கிடைத்து விடுகிறது. சில ஸ்டார்களின் பிள்ளைகள் ஆடிஷனுக்கு கூட செல்லாமல் பட வாய்ப்பை பெறுகிறார்கள். சினிமா பின்னணி இல்லாமல் வந்து ஜெயிப்பவர்களுக்கே மக்கள் மத்தியில் அதிக மதிப்பு உள்ளது என்று நான் நினைக்கிறேன்.

பட வாய்ப்பு
நான் பாலிவுட் பட வாய்ப்பு தேடி அலைந்தபோது 30 பட ஆடிஷன்களில் கலந்து கொண்டேன். ஆனால் அனைத்து ஆடிஷன்களிலும் என்னை நிராகரித்துவிட்டனர். அதன் பிறகே 2013ம் ஆண்டு இஷாக் படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டேன். முதல் படம் ஓடவில்லை என்றால் இரண்டாவது படம் கிடைப்பது ரொம்பவே கஷ்டம்.

இமேஜ்
சினிமா பின்னணி இல்லாமல் வருபவர்களுக்கு பக்க பலமாக இருக்க யாரும் இல்லை. அதனால் தான் சினிமா பின்னணி இல்லாமல் நடிக்க வருபவர்கள் மனதளவில் திடமாக உள்ளனர் என்று நினைக்கிறேன். எனக்கு படங்களில் நடிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் இது பயமுறுத்தும் வேலை. குறிப்பிட்டபடி வாழ வேண்டும், இமேஜ் மெயின்டெய்ன் செய்ய வேண்டும். இல்லை என்றால் மோசமான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

ஹீரோயின்
மக்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். ஹீரோயின் என்றால் ஒல்லிக்குச்சியாக, உயரமாக, சிவப்பாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் தற்போது இல்லை. சினிமா துறையில் உள்ள பெண்கள் தங்களின் கருத்துகளை தைரியமாக சொல்லி வருகிறார்கள். மாற்றம் நிச்சயம் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார் அமிரா தஸ்தூர்.


Click it and Unblock the Notifications











