Don't Miss!
- Education
CISF constable, Driver Recruitment 2023:டிரைவிங் தெரியும்? சி.ஐ.எஸ்.எஃப்.,இல் ரூ.69 ஆயிரத்தில் வேலை...!
- Lifestyle
தக்காளி சாஸ் வெச்சு இத்தனை பொருட்களை சுத்தம் செய்ய முடியுமா? இத படிச்சு நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க...
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Automobiles
2-3 லட்ச ரூபா டவுண்பேமென்டிலேயே இந்த எஸ்யூவி கார்களை வாங்கிடலாம்! நம்பவே முடியல.. இந்த காரைகூட வாங்க முடியுமா?
- Sports
முகமது சிராஜை ஏமாற்றுகிறாரா ரோகித்.. நன்றாக ஆடியும் அங்கீகாரம் இல்லை.. மஞ்ச்ரேக்கர் குற்றச்சாட்டு
- News
"ரெக்கார்டு".. 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து.. சாதனை செய்த கோவை பெண்.. சபாஷ்
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- Finance
பெண்கள் ஐபிஎல்.. 4670 கோடி கல்லாகட்டிய BCCI.. இங்கேயும் அம்பானி, அதானி..!
ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்
Recommended Video
சென்னை: கமலுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த மகள் சுஜா வருணி கர்ப்பமாக உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜா வருணியை கமல் ஹாஸன் தனது சொந்த மகள் போன்று பார்க்கிறார். தனது காதலரான சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை திருமணம் செய்து கொண்டார் சுஜா. திருமணம் முடிந்த பிறகு சுஜாவுக்கும், அவரின் கணவருக்கும் தனது வீட்டில் அமர்க்களமான விருந்து வைத்து பரிசுகள் கொடுத்தார் கமல் ஹாஸன்.

சுஜா வருணி தற்போது கர்ப்பமாக உள்ளார். அவருக்கு சீமந்தம் நடந்துள்ளது. சீமந்தத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் சுஜா. மேலும் தனது கணவர் பற்றி அவர் கூறியிருப்பதாவது,
View this post on InstagramA post shared by Suja varunee official (@itssujavarunee) on
இந்த உலகின் சிறந்த மனிதரான சிவகுமாருக்கு நன்றி. என் வாழ்கையில் உண்மையான மகிழ்ச்சியை காட்டியவர் சிவகுமார். நான் ஒரு உண்மையான பெண் என்பதை உணர வைத்தவர். ஐ லவ் யூ அத்தான். நீங்கள் கொடுக்கும் பரிசுகள் எப்பொழுதுமே ஸ்பெஷலானவை. எனக்கு அந்த ஜிமிக்கி மிகவும் பிடித்துள்ளது..என் அன்பு கணவருக்கு நன்றி.
நீங்கள் எனக்கு கணவராக கிடைக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.. குடும்பம் போன்று இருக்கும் நண்பர்களுக்கு என் நன்றி. என் சீமந்த நிகழ்ச்சி இந்த அளவுக்கு நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் வாழ்க்கையில் சீமந்தத்தை இனிய நினைவாக ஆக்கிய என் கணவர் குடும்பத்தாருக்கு நன்றி..குடும்பத்தார் அனைவரையும் சேர்த்து பார்க்கும் போது ஏற்பட்ட என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று தெரிவித்துள்ளார் சுஜா.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது சுஜா வருணியும், நடிகர் கணேஷ் வெங்கட்ராமும் நண்பர்கள் ஆனார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் நல்ல நண்பர்களாக உள்ளனர். கணேஷின் மனைவி நிஷாவும் கர்ப்பமாக உள்ளார். நண்பர்கள் இருவர் வீட்டிலும் அடுத்தடுத்து குழந்தை பிறக்கப் போகிறது.
சுஜா வருணியின் கணவர் சிவகுமார் நடிகை ஸ்ரீப்ரியாவின் சகோதரியின் மகன் ஆவார். சுஜா, சிவா திருமணத்தை ஸ்ரீப்ரியா தான் முன் நின்று நடத்தி வைத்து அவர்களை ஆசிர்வாதம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.