என் நிர்வாண போட்டோ ரொம்ப முக்கியமா, போய் புள்ளகுட்டிய படிக்க வைங்க: நடிகை
மும்பை: என்னை வெறுக்கும் அனைவருக்கும் நன்றி என்று பாலிவுட் நடிகை இஷா குப்தா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை இஷா குப்தா தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் டாப்லெஸ் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்த நெட்டிசன்களோ அவரை கலாய்த்தனர்.
இது குறித்து இஷா பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது கூறியிருப்பதாவது,

புகைப்படங்கள்
நான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களை லைக் செய்தவர்கள் சிலர் தான். ஆனால் அவற்றை கிண்டல் செய்தவர்கள் பலர். எது புதிதாக வந்தாலும் அதை விமர்சிப்பவர்களே அதிகம்.

போன்
அனைவருக்கும் கருத்து உள்ளது, கையில் ஆன்ட்ராய்டு போன் உள்ளது. சமூக வலைதளங்களை எப்படி பயன்படுத்துவது என்று அனைவருக்கும் தெரிந்துள்ளது.

வாழ்க்கை
தனியாக வாழ்க்கை இல்லாதவர்கள் தான் அடுத்தவர்களை பற்றி கமெண்ட் போட்டு, என்னை கிண்டல் செய்தவர்கள். மறக்கப்படுவதை விட வெறுக்கப்படுவது நல்லது. அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.

நன்றி
என்னை தேசிய செய்தியாக்கிய என்னை வெறுக்கும் அனைவருக்கும் நன்றி. நாட்டில் எவ்வளோ விஷயம் இருக்க நீங்கள் என்னை பற்றி விவாதிக்கிறீர்கள். ஐ லவ் யூ என்று இஷா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











