ஐ லவ் யூ டூ... ஐ மேரி டூ...வைரலாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் பட டயலாக்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது காத்து வாக்குல ரெண்டு காதல் படம். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள நிலையில் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவன்

இவர் கடைசியாக சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த நிலையில், அடுத்ததாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான பாவக்கதைகள் ஆந்தாலஜி சீரிசில் லவ் பண்ணா உட்ரனும் எபிசோடை இயக்கினார். இதுவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அஜித்தை இயக்கும் விக்னேஷ் சிவன்

அஜித்தை இயக்கும் விக்னேஷ் சிவன்

தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியுள்ள விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்குமாரை அவரது ஏகே62 படத்திற்காக இயக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதனிடையே அவரது காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு

படத்தை நயன்தாரா -விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. படத்தை முதல் நாள் முதல் ஷோவில் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படத்தின் முதல் ஷோ காலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளது. டிக்கெட் விற்பனையும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

புதிய ப்ரமோ வெளியீடு

புதிய ப்ரமோ வெளியீடு

படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தாவுடன் பிரபு, கலா மாஸ்டர் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் கலக்கலான புதிய ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது.

ஐ லவ் யூ டூ... ஐ மேரி யூ டூ

ஐ லவ் யூ டூ... ஐ மேரி யூ டூ

முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரையும் விஜய் சேதுபதி காதலிப்பதாக காட்சிகள் ட்ரெயிலர் உள்ளிட்டவற்றில் காணப்படுகின்றன. இருவரையும் விட முடியாமல் அவர் தவிப்பதாகவும் காட்சிகள் உள்ளன. அவர் ஐ லவ் யூ டூ, ஐ மேரி யூ டூ என்று பேசும் வசனம் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X