இப்ப மட்டுமில்ல... எப்பவுமே காதலிப்பேன்... காதலாகி கசிந்துருகிய கீதாஞ்சலி செல்வராகவன்
சென்னை : இயக்குநர் செல்வராகவன் சிறப்பான பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது நடிகர் அவதாரமும் எடுத்துள்ளார்.
இவருக்கும் கீதாஞ்சலிக்கும் கடந்த 2011 ஜூன் 19ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இருவருடைய திருமண வாழ்க்கை பயணம் குறித்த புகைப்படங்களை தற்போது கீதாஞ்சலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

2011ல் கீதாஞ்சலியுடன் திருமணம்
இயக்குநர் செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வாலுக்கு கடந்த 2006ல் திருமணம் நடைபெற்றது. ஆனால் இரண்டு வருடங்கள் கூட அந்த திருமணம் நிலைக்கவில்லை. இதையடுத்து செல்வராகவன் கடந்த 2011 ஜூன் மாதத்தில் கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார்.

செல்வராகவனுககு ஊக்கம்
இவர்களின் வாழ்க்கை சிறப்பாக சென்று வருகிறது. செல்வராகவனின் பல்வேறு பணிகளுக்கு ஊக்கம் கொடுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார் கீதாஞ்சலி. குடும்பத்தினருடனும் சிறப்பான புரிதல் காணப்படுகிறது. தற்போது செல்வராகவன் டைரக்ஷன் மட்டுமின்றி நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

புகைப்படங்களாக பதிவு
இந்நிலையில் கடந்த 2010 முதல் தங்களது திருமண வாழ்க்கை பயணத்தை 3 பிரிவாக பிரித்து புகைப்படங்களாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கீதாஞ்சலி. ஒவ்வொரு புகைப்படமும் வித்தியாசமாக உள்ளது. வித்தியாசமான வாழ்க்கை நிலைகளை படம்பிடித்து காட்டுகிறது.

எப்போதும் குறையாது
இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், செல்வராகவனுடனான காதல் முன்பும் தற்போதும் எப்போதும் குறையாது என்று தெரிவித்துள்ளார். திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஐ லவ் யூ செல்வராகவன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் காதல் உள்ளிட்ட பல்வேறு எமோஜிகளையும் இணைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











