கல்யாணம் ஆகல ஆனால் 3 வயதில் குழந்தை இருக்கு: குண்டை தூக்கிப் போட்ட நடிகை
மும்பை: பாலிவுட் நடிகை மாஹி கில் தனக்கு ஒரு குழந்தை இருப்பதாகக் கூறி அதிர வைத்துள்ளார்.
தேவ் டி பாலிவுட் படம் மூலம் பிரபலமானவர் மாஹி கில். நடிக்க வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும் அவரால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை.
45 வயதாகும் மாஹி கில்லுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மாஹி
பேட்டி ஒன்றில் தனக்கு பெண் குழந்தை இருப்பதாகவும் வரும் ஆகஸ்ட் மாதம் அதன் மூன்றாவது பிறந்தநாள் வருவதாகவும் மாஹி கில் தெரிவித்துள்ளார். மாஹி சிங்கிள் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு குழந்தை இருப்பதாக தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

கேள்வி
மாஹி கில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது இல்லை. இந்நிலையில் அவர் 3 வயது குழந்தை இருப்பதாக தெரிவித்துள்ளார். இத்தனை நாள் ஏன் இதை மறைத்தீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் ஒன்றும் மறைக்கவில்லை. உங்களுக்கு குழந்தை இருக்கிறதா என்று மீடியா இதுவரை என்னிடம் கேட்டது இல்லை. தற்போது கேட்டதால் பதில் அளித்தேன். ஒரு பெண் குழந்தைக்கு தாய் என்பதில் பெருமையாக உள்ளது என்றார்.

திருமணம்
நான் ஒன்றும் சிங்கிள் இல்லை. எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. எப்பொழுது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுது செய்து கொள்வேன். மேலும் திருமணம் செய்து கொள்வதற்கான தேவை என்ன?. எல்லாம் நம்மை பொறுத்து தான் உள்ளது. திருமணம் செய்யாமலே குடும்பம், குழந்தைகளுடன் இருக்கலாம் என்று மாஹி கில் தெரிவித்தார்.

வியப்பு
திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. திருமணம் என்பது அழகான விஷயம். ஆனால் திருமணம் செய்வதும், செய்யாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் என்று மாஹி கில் கூறினார். மாஹி கில் சிங்கிள் என்று நினைத்தவர்கள் அவர் ஒரு குழந்தைக்கு தாய் என்பது குறித்து அறிந்து வியப்பில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











