Exclusive: படத்துல தான் அப்டி.. நிஜத்துல நான் ‘ராகவா’ கேரக்டர் தான்: உண்மையைச் சொன்ன வேதிகா!
உண்மையில் தனக்கு பேய் பயம் அதிகம் என நடிகை வேதிகா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பேய் மீது இருந்த பயத்தை, இயக்குனர் ராகவா லாரன்ஸ் போக்கிவிட்டதாக நடிகை வேதிகா தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 3 படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத் தயாரிப்பு நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி, இப்படம் ரூ.130 கோடி வசூல் செய்துள்ளது.
இதனால் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் சென்னை வந்திருந்த நடிகை வேதிகாவை ஒன்இந்தியாவுக்காக சந்தித்தேன்.
அவருடன் பேசியதில் இருந்து,

காஞ்சனாவின் வெற்றி
"காஞ்சனா 3 இவ்வளவு பெரிய வெற்றி அடைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதனை சாத்தியப்படுத்திய மக்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். தமிழில் எனது இரண்டாவது படமே முனி தான். அந்த படமும் பெரிய வெற்றி பெற்றது. காஞ்சனா 3ம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருப்பது உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது.

காமெடியை மிஸ் பண்ணினேன்
நான் நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பரதேசி, காவிய தலைவன் என தடம் பதிக்கும் படங்களில் நடித்துள்ளேன். கன்னடத்தில் நான் நடித்த சிவலிங்கா சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இருந்தாலும் நடுவில் சில காலம் சீரியஸாகவே நடித்ததால், காமெடியை மிஸ் செய்தேன். அந்த குறையை காஞ்சனா 3 போக்கிவிட்டது.

பேய் பயம்
எனக்கு பேய் படங்களில் நடிக்க பிடிக்கும். காஞ்சனா 3 படப்பிடிப்பின் போது, இரவு நேரத்தில் ஷூட்டிங் பங்களாவில் இருந்து வெளியே வருவதற்குள் பயந்து நடுங்கிவிடுவேன். ஷூட்டிங் முடிந்து ஹோட்டல் ரூமுக்கு போனாலும், அதே ஞாபகமாகவே இருக்கும். தூங்கவே முடியாது.

நான்தான் ராகவா
உண்மையில் படத்தில் வரும் ராகவா கதாபாத்திரம் எனக்கு தான் பொருந்தும். அந்த அளவுக்கு பேய் பயம் கொண்டவள் நான். இரவில் தூங்கும் போது கூட விளக்கை அணைக்கவே மாட்டேன். தமிழில் ஒரு படத்திலாவது பேயாக நடித்து, எனது பயத்தை போக்க வேண்டும்.
பேய் காமெடி
முனி படத்திற்கு பிறகு தான் காமெடியுடன் கூடிய பேய் படங்கள் வரத்தொடங்கின. அதற்கு முன்னர் பேய் படங்கள் என்றால், குழந்தைகளை அனுமதிக்க மாட்டார்கள். காஞ்சனா 3ன் வெற்றிக்கு முக்கிய காரணம், பேயை காமெடி பீசாக்கியது தான். குழந்தைகள் தான் இந்த வெற்றிக்கு சொந்தக்காரர்கள்", என வேதிகா கூறினார்.
நடிகை வேதிகாவின் முழு வீடியோ பேட்டியை பார்க்க இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications











