'ப்பா.. என்னா நடிகைங்க அவங்க.. நானே பயந்துட்டேன்'.. மஞ்சுவாரியருடன் நடித்த அனுபவம் பற்றி தனுஷ்!
சக நடிகர் பார்த்து பயப்பட வேண்டிய நடிப்பு மஞ்சு வாரியருடையது என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதை பார்த்து தான் பயந்ததாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள படம் 'அசுரன்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. இதில் தனுஷ், வெற்றிமாறன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் தனுஷ், நடிகை மஞ்சு வாரியரின் நடிப்பை புகழ்ந்து தள்ளினார். இதுகுறித்து அவர் பேசியதாவது,

நாகேஷ் அறிவுரை
"காதல் கொண்டேன் படத்தில் நடித்த போது, மற்றவர்கள் நடிப்பதை பார்த்து வியந்து நாகேஷ் சாரிடம் நிறைய பேசுவேன். எப்படி நடிக்கிறாங்க பாருங்க சார், நானும் அப்படி நடிக்க வேண்டும் என்று மிக ஆர்வமாகச் சொல்லுவேன்.

எது நடிப்பு
அப்போது அவர் , 'டேய் யார் உன் கண் முன்னால் பயங்கரமாக நடிக்கிறார்கள் என்று தெரிகிறதோ அதுதான் சுமாரான நடிப்பு. நடிப்பதே தெரியாமல் நடிப்பதுதான் பெரிய நடிப்பு' என்றார். அப்படிப் பார்த்து பயப்பட வேண்டிய ஒரு நடிகை மஞ்சு வாரியர்.

இயல்பான நடிகை
அவர் நடிப்பதே தெரியாது. எப்படி ஒரு கதாபாத்திரமாக நடித்துவிட்டு சட்டென இயல்பாக மாறிவிடுகிறார் என்பதே எனக்குத் தெரியவில்லை. சில முக்கியமான காட்சிகளில் நடித்துவிட்டு என்னால் அந்த கதாபாத்திரத்திலிருந்து சட்டென வெளியே வர முடியாது.

ஆச்சர்யம்
அப்படியே இருப்பேன். ஆனால் அவர் நடித்து முடித்த அடுத்த நொடியே ஜாலியாக சிரித்துக் கொண்டிருப்பார். எப்படி அவரால் முடிகிறது என்பதே தெரியாது" என ஆச்சர்யம் தெரிவித்துள்ளார் தனுஷ்.


Click it and Unblock the Notifications











