“மஹாபாரதம் படத்தை எடுக்க பயமா இருக்கு”: அமீர்கான் விளக்கமும், ராஜமெளலி ரசிகர்களின் எதிர்பார்ப்பும்

மும்பை: அமீர்கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' திரைப்படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

'லால் சிங் சத்தா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறார் அமீர் கான்.

அப்போது கனவுத் திரைப்படமான மஹாபாரதம் குறித்து கூறியுள்ள அமீர்கான் பேசிய கருத்து வைரலாகி வருகிறது.

அமீர்கானின் லால் சிங் சத்தா

அமீர்கானின் லால் சிங் சத்தா

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில், அமீர்கானுக்கு ஆர்வம் அதிகம். தமிழில் கமல்ஹாசன் மாதிரி, இந்தியில் அமீர்கான், இவரும் பல புதிய முயற்சிகளை தனது படங்களில் செய்துகொண்டே இருப்பார். ரங் தே பஸந்தி, தாரே ஜமீன் பார், லகான், பீகே போன்ற படங்கள் எல்லாம் சிறிய உதாரணங்கள் தான். அப்படி அமீர்கான் பல வருடங்கள் காத்திருந்து நடித்துள்ள படம் 'லால் சிங் சத்தா.'

14 ஆண்டுகால போராட்டம்

14 ஆண்டுகால போராட்டம்

1994ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான 'Forrest Gump' படத்தின் இந்தி ரீமேக் தான் 'லால் சிங் சத்தா' என்பது பலருக்கும் தெரிந்ததே. ஆனால், இந்தப் படத்தை அமீர்கான் திரையில் கொண்டுவருவதற்காக 14 ஆண்டுகள் காத்திருந்தாராம். இந்தப் படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸை வாங்க, கிட்டத்தட்ட 8 முதல் 9 ஆண்டுகள் ஆனதாக, அமீர்கான் தெரிவித்துள்ளார். ஆகமொத்தம் 14 ஆண்டுகள் கழித்து, இப்போது 'லால் சிங் சத்தா' வெளியாக உள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

அமீர்கானின் கனவுத் திரைப்படம்

அமீர்கானின் கனவுத் திரைப்படம்

நம்மூர் திரை பிரபலங்களுக்கு 'பொன்னியின் செல்வன்' எப்படி கனவுப் படமாக இருந்ததோ, அதேபோல் பாலிவுட்காரர்களுக்கு மஹாபாரதம், கனவுப் படம். அதில் அமீர்கான் ரொம்பவே நம்பிக்கையாக இருந்தார். கண்டிப்பாக மஹாபாரதத்தை படமாக எடுப்பேன் என, அமீர்கான் பலமுறை கூறியது உண்டு. இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இப்போது பயமாக இருக்கிறது

இப்போது பயமாக இருக்கிறது

இந்நிலையில், 'லால் சிங் சத்தா' படத்தின் ப்ரோமோஷனில் பேசிய அமீர்கான், "தற்போது மாஹாபாரதத்தை படமாக எடுக்க பயமாக இருப்பதாகக்" கூறியுள்ளார். மேலும், 'மஹாபாரதம்' யாகம் போன்றது, அதனை படமாக எடுக்க வேண்டுமானால், எனக்கு 20 ஆண்டுகள் தேவைப்படும்" எனவும் ஓப்பனாக பேசியுள்ளார். இதனால், அமீர்கான் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், தற்போது ராஜமெளலி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏனெனில் ராஜமெளலியும் தனது கனவுப் படம் மஹாபாரதம் எனவும், அதனை விரைவில் எடுப்பேன் என்றும் கூறி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X