Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கமலே இப்படி சொன்னால், அப்போ ரஜினி?
Recommended Video
சென்னை: அரசியல் குறித்து கமல் ஹாஸன் தெரிவித்த கருத்தை கேட்டவர்கள் இவரே இப்படி சொன்னால் அப்போ ரஜினி என்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிப்பில் துவங்கிய இந்தியன் 2 படம் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும்.
இந்நிலையில் படம் மற்றும் அரசியல் குறித்து கமல் ஹாஸன் கூறியதாவது,
கர்ப்பமாக இருப்பது தெரியாமல் ஏமி ஜாக்சன் செய்த காரியத்தை பாருங்க
ஷங்கர்
இந்தியன் 2 படம் கைவிடப்படவில்லை. படத்தில் அரசியல் சித்தாந்தத்தை சேர்ப்பதும், சேர்க்காததும் ஷங்கரின் விருப்பம். தற்போது என் கவனம் எல்லாம் மக்கள் பக்கம் உள்ளது. இந்தியன் 2 தான் நான் நடிக்கும் கடைசி படம்.
லேட்
நான் ஏற்கனவே லேட்டாக அரசியலுக்கு வந்துள்ளேன். அதனால் நான் விரைந்து செயல்பட வேண்டும். எனவே என்னால் சினிமா மற்றும் அரசியல் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்த முடியாது. ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்த விரும்புகிறேன். அந்த ஒன்று அரசியல் தான் என்றார் கமல் ஹாஸன்.
கடைசி படம்
கமல் ஹாஸன் பேட்டி அளிக்கும்போது எல்லாம் இந்தியன் 2 தான் நான் நடிக்கும் கடைசி படம் என்று கூறுவதை கேட்டு அவரின் ரசிகர்கள் கவலை அடைகிறார்கள். இருப்பினும் அவரை அரசியல் களத்தில் காணலாம் என்பதால் மனதை தேற்றிக் கொள்கின்றனர்.
ரஜினிகாந்த்
கமல் ஹாஸன் மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கி லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். அவரே தான் அரசியலுக்கு வந்தது லேட் என்றால் ரஜினிகாந்த் இன்னும் கட்சியே துவங்கவில்லையே, அவரை என்ன சொல்வது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.