»   »  நான் ஒரு ரஜினி ரசிகன்.. சென்னைக்கு வர இதைவிட பெரிய காரணம் வேண்டுமா?- ராம்கோபால் வர்மா

நான் ஒரு ரஜினி ரசிகன்.. சென்னைக்கு வர இதைவிட பெரிய காரணம் வேண்டுமா?- ராம்கோபால் வர்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகன் நான். சென்னையில் நான் இருப்பதற்கு இதை விட வேறு காரணம் வேண்டுமா? என்றார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

சமூக வலைத் தளமான ட்விட்டரில் அடிக்கடி ரஜினி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவு செய்பவர் ராம்கோபால் வர்மா. விமர்சிக்கிறாரா, பாராட்டுகிறாரா என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இருக்கும் இவரது கருத்துகள்.

I'm a big Rajini fan, says RGV

ஆனால் கடந்த சில வாரங்களாக ரஜினியை மிகவும் புகழ்ந்து வருகிறார். குறிப்பாக கபாலி ட்ரைலர் பார்த்துவிட்டு, ரஜினிக்காகவே நான்கு முறை கபாலி பார்க்கப் போகிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தனது வில்லாதி வில்லன் வீரப்பன் படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்துள்ளார் ராம்கோபால் வர்மா.

செய்தியாளர்களிடம் பேசும்போது, "நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப் பெரிய ரசிகன். இங்கு சென்னைக்கு வர அதை விட பெரிய காரணம் வேறு எதுவும் தேவையில்லை," என்றார்.

English summary
Ram Gopal Varma has praised Rajinikanth again and says that he is big fan of him.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos