உங்களால் நான் காண்டாகல, கடுப்பாகல, கோபமாகலயே: காயத்ரி ரகுராம்
சென்னை: உங்களால் நான் கடுப்பாகி, காண்டாகி, கோபத்தில் இருப்பேன் என்று நினைக்கிறீர்கள் அது தான் இல்லை என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது கெட்ட வார்த்தை பேசியதால் காயத்ரி ரகுராமை பார்வையாளர்களுக்கு பிடிக்காமல் போனது. அவரை கமல் ஹாஸன் ஏன் கண்டிக்கவில்லை என்றும் கேட்டனர்.
அதில் இருந்து காயத்ரியை நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.

கலாய்
காயத்ரி ரகுராம் ட்விட்டரில் புகைப்படம் வெளியிட்டாலோ, கருத்து சொன்னாலோ, ஏன் ஒரு குட் மார்னிங் சொன்னால் கூட அவரை நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கலாய்க்கிறார்கள், திட்டுகிறார்கள்.
கோபம்
உங்களால் நான் கடுப்பாகி, காண்டாகி, கோபத்தில் இருப்பேன் என்று நினைக்கிறீர்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால் எனக்கு கிடைக்கும் அட்டேன்ஷனை ரசிக்கிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக என்று ட்வீட்டியுள்ளார் காயத்ரி.
கிண்டல்
என்ன பண்றது சார் எல்லாம் சிரிப்பா இருக்கு
வேதனை
வெட்கமில்லை துக்கமில்லை வேஷமொரு தோஷமில்லை. . இப்படி லூசு மாதிரி நீங்க புலம்புவதை பார்த்து நாங்க சந்தோஷப்படல வேதனைப்படுகிறோம்.Pls take care
மன்னிப்பு
கூல் பண்ண வேண்டாம் இப்போதைக்கு தேவை மன்னிப்பு மட்டுமே.
அர்த்தம்
காண்டுக்கெல்லாம் அர்த்தம் தெரியும் மேடமுக்கு ஆனால் சீர் ஜாதிக்கெல்லாம் அர்த்தம் தெரியாது அப்படித்தானே


Click it and Unblock the Notifications











