திருமணத்துக்குப் பிறகு இப்பதான்.. கணவர் குடும்பத்தில் ஐக்கியமான நடிகை.. ரசித்து வாழ்வதாக மகிழ்ச்சி

By

சென்னை: திருமணத்துக்குப் பிறகு கணவர் குடும்பத்துடன் அதிக நாட்கள் இருப்பது இப்போதுதான் என்று தெரிவித்துள்ளார், நடிகை பிரியாமணி.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார், நடிகை பிரியாமணி.

பருத்திவீரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர். இப்போது தெலுங்கில் ராணாவுடன் விரதபர்வம் 1992 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மெடிக்கல் த்ரில்லர்

மெடிக்கல் த்ரில்லர்

இதில் நக்சலைட்டாக அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழ், கன்னடத்தில் உருவாகும் டாக்டர் 56 என்ற மெடிக்கல் த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். இந்தியில் அஜய்தேவ்கன் நடிக்கும் மைதான் படத்தில், அவர் மனைவியாக நடிக்கிறார். இந்தி வெப் சீரிஸான ஃபேமிலிமேனில் மனோஜ் பாஜ்பாய் மனைவி கேரக்டரில் நடித்திருந்தார்.

லாக்டவுன்

லாக்டவுன்

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து அடீட் ( Ateet) என்ற புதிய வெப் சீரிஸில் நடிக்கிறார். இதில் அவர் ராணுவ வீரரின் மனைவியாக நடிக்கிறார். இந்நிலையில், திருமணத்துக்குப் பிறகு இந்த லாக்டவுனில்தான் நீண்டநாள் குடும்பத்துடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார், ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் நடிகை பிரியாமணி.

பருத்திவீரன்

பருத்திவீரன்

அவர் கூறி இருப்பதாவது: மனதுக்கு நெருக்கமான படங்கள் பற்றிக் கேட்கிறார்கள். அப்படி சொல்வதை விட சவாலானதாக இருந்த மூன்று படங்களை என்னால் மறக்க முடியாது. அது, பருத்திவீரன், சாருலதா, திரைக்கதா (மலையாளம்). இந்தப் படங்களில் அனுபவித்து நடித்தேன். படங்கள் ஓடியதா, இல்லையா என்பது பற்றி பொருட்படுத்தாமல் நான் நடித்த அனைத்து கேரக்டர்களையும் ரசித்திருக்கிறேன்.

நிறைய மாற்றங்கள்

நிறைய மாற்றங்கள்

ஒரு படம் ஓடவில்லை என்பதற்கு, நடிகர்களை குறை சொல்ல முடியாது. ஒரு நடிகர் ஓர் உள்ளுணர்வின் அடிப்படையில் ஒரு கேரக்டரை தேர்ந்தெடுப்பார். ஆனால் படம் வெளிவரும்போது அதில் நிறைய மாற்றங்கள் இருக்கும். நான் வேண்டாம் என்று நினைத்தாலும் தூண்டுதலின் அடிப்படையில் ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், மற்றப் படங்களை அனுபவித்து நடித்திருக்கிறேன்.

நோன்பு காலம்

நோன்பு காலம்

இந்த லாக்டவுனில் கணவர் முஸ்தபா வீட்டில் இருக்கிறேன். திருமணத்துக்குப் பிறகு குடும்பத்துடன் அதிக நாட்கள் ஒன்றாக இருப்பது இப்போதுதான். இது நோன்பு காலம். முஸ்தபாவும் அவர் அம்மாவும் நோன்பு கடைபிடிக்கிறார்கள். அவர் அப்பா கடைபிடிக்கவில்லை. நான் கிச்சனில் உதவி புரிகிறேன். மற்ற நேரங்களில் இதுவரை பார்க்காத படங்கள், வெப்சீரிஸ்களை பார்க்கிறேன்.

மைதான் ஷூட்டிங்

மைதான் ஷூட்டிங்

லாக்டவுன் பற்றி வீட்டில் பேசுகிறோம். இந்தச் சூழலின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிக்கிறேன். இந்தியின் அஜய்தேவ்கனுடன் நடிக்கும் 'மைதான்' படம் பற்றி கேட்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அந்தப் படத்தின் எனது பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. லாக்டவுனுக்கு முன்பாகவே பெரும்பாலான ஷூட்டிங் முடிந்துவிட்டது. இவ்வாறு பிரியாமணி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X