விஜய்கிட்ட அம்மாவா நான் எதிர்பார்க்கிறது இதைதான்... மாஸ்டர் ஆடியோ விழாவில் ஷோபா சந்திரசேகர்

By

சென்னை: நடிகர் விஜய்யிடம் அம்மாவாக எதிர்பார்ப்பது இதைதான் என்று ஷோபா சந்திரசேகரன் தெரிவித்தார்.

Recommended Video

Live Master Audio Launch | Thalapthy Vijay Speech |Missing Fans| Lokesh Kanagaraj

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

Im expecting one hug from My son Vijay: shoba chandrasekhar

வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், அருண்ராஜா காமராஜ், உதவி இயக்குனர் விஷ்ணு, பாடல்கள் எழுதியுள்ளனர். சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்து வருகிறது.

இதில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும்போது, சந்தோஷமாக இருக்கிறேன். முன் வரிசையில் என் உறவினர்கள் இருக்கிறார்கள். பின்னால் இருப்பவர்களும் என் உறவினர்கள்தான். சந்தோஷத்தில் எனக்கு பேச்சே வரவில்லை. விஜய்யை மாஸ்டராகப் பார்ப்பது பற்றி கேட்கிறார்கள். அதற்கு உழைப்புதான் காரணம். எனக்கு தமிழே சரியாக வராது. ஆனால், இந்தி உட்பட சில பிறமொழி ஹீரோக்களை இயக்கி இருக்கிறேன். அதற்கு காரணமும் உழைப்பு. விஜய்யை, நான் நாளைய தீர்ப்பு என்று ஏற்கனவே நான் கணித்து இருக்கிறேன். நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ தெரியாது. நான் எதிர்பார்ப்பது வேற'' என்றார்.

விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரிடம், விஜய்க்கு பாடல் பாடுவது உங்கள் மூலமாகத்தான் வந்திருக்கும். விஜய் பாடியதில் உங்களுக்கு பிடித்த பாடல் எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றிருக்கும் 'குட்டி ஸ்டோரி'தான் பிடித்த பாடல் என்றார். 'தமிழ்நாட்டுல அவர்ட்ட நிறைய பேர் நிறைய விஷயங்களை எதிர்பார்க்கிறாங்க. ஓர் அம்மாவா நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க?' என்று கேட்டதும், விஜய்யிடம் நான் எதிர்பார்ப்பது ஒரே ஒரு ஹக் மட்டுமே என்றார். உடனடியாக மேடையேறிய விஜய், அம்மா ஷோபாவையும் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனையும் கட்டிப் பிடித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X