'நான் அப்பவே உனக்கு ரசிகன் ஆகிட்டேன்'.. சமந்தாவை நெளிய வைத்த மாமனார்!
ஐதராபாத் : தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டு நாகார்ஜூனாவின் மருமகள் ஆனார் நடிகை சமந்தா.
மருமகள் சமந்தாவும், மாமனார் நாகார்ஜூனாவும் நடித்துள்ள 'ராஜு காரி காதி 2' படம் நேற்று தெலுங்கில் வெளியானது.
இப்படத்தில் சமந்தா பேய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்வு ஒன்றில் பேசிய நாகார்ஜூனா, தான் சமந்தாவின் ரசிகன் என்று சொல்லி சமந்தாவை வெட்கப்பட வைத்துள்ளார்.

சமந்தா ரசிகன்
'சமந்தா முதலில் நடித்த 'ஏ மாய சேஸாவே' படத்தைப் பார்த்ததில் இருந்தே நான் சமந்தாவின் ரசிகன் ஆகிவிட்டேன். அந்தப் படத்தைப் பார்த்ததும் அவருக்கு போன் செய்து அவருடைய ரசிகன் ஆகிவிட்டேன் எனத் தெரிவித்தேன்.

க்ளைமாக்ஸ்
'ராஜு காரி காதி 2' படத்தில் சமந்தா மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் அவருடைய நடிப்பு மிகவும் அர்த்தமானதாக இருக்கும். படத்தில் ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள்.

நிறைய நடிக்க வேண்டும்
இந்தப் படத்தில் சமந்தாவின் நடிப்பு மிகச் சிறந்த நடிப்பு என்று சொல்ல மாட்டேன். அவர் இதை விட இன்னும் சிறப்பான படங்களில், நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்.

அம்ருதா கேரக்டர்
ஆனால், சமந்தா இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலேயே இந்தப் படத்தில் நடித்த அம்ருதா கதாபாத்திரம்தான் மிகச் சிறந்தது' என நாகார்ஜூனா பாராட்டினார்.


Click it and Unblock the Notifications