நான் விஜய், சூர்யா ரசிகையாக்கும்: 'கடல்' துளசி
சென்னை: தான் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரின் ரசிகை என்று கடல் பட நாயகி துளசி தெரிவித்துள்ளார்.
ராதாவின் இளைய மகள் துளசிக்கு வெறும் 15 வயது தான். இந்த ஆண்டு தான் அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகிறார். ஆனால் அதற்குள் ஒரு படத்தில் அதுவும் மணிரத்னத்தின் படத்தில் நடித்து முடித்துவிட்டார். கடல் படத்தை முடித்த கையோடு அவர் ஜீவாவுடன் சேர்ந்து யான் படத்தில் நடித்து வருகிறார்.
ராதா, கார்த்திக்குடன் சேர்ந்து நடித்த அலைகள் ஓய்வதில்லை அவர்கள் இருவருக்குமே பெயர் வாங்கிக் கொடுத்த படம். இன்று கடல் படத்தில் ராதாவின் இளைய மகளும், கார்த்திக்கின் மகனும் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படி நடக்கும் என்று அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்திருந்திருக்க மாட்டார்கள். எல்லா நடிகைகளுக்கும் யாராவது பிடித்த நடிகர், நடிகை இருப்பார்கள். அப்படி துளசிக்கு யாரைப் பிடிக்கும் என்று பார்ப்போம்.

விஜய், சூர்யா ரசிகை
துளசிக்கு இளைய தளபதி விஜயும், சூர்யாவும் தான் மிகவும் பிடித்த நடிகர்களாம்.

அலைகள் ஓய்வதில்லையை 10 தடவைப் பார்த்தேன்
கடல் படத்தில் நடிக்க தனது தாய் ராதா நடித்த அலைகள் ஓய்வதில்லை படத்தை 10 தடவை பார்த்தாராம் துளசி.

அம்மா, கார்த்திக் இடையே செம கெமிஸ்ட்ரி
அலைகள் ஓய்வதில்லை படத்தில் தனது தாய் ராதா மற்றும் கார்த்திக் இடையே இருந்த கெமிஸ்ட்ரியைப் பார்த்து துளசி ஆச்சரியப்பட்டாராம்.


Click it and Unblock the Notifications











