போன வருஷம் மாம்பழம்.. இந்த வருஷம் டிராகன் ஃப்ரூட்.. தன்னைத் தானே வர்ணித்துக் கொள்ளும் அமலா பால்!
சென்னை: லாக்டவுன் தளர்வு காரணமாக ஒரு வழியாக ஊர் சுற்ற கிளம்பி விட்டார் போல அமலா பால், காரில் தோழியுடன் செல்லும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
Recommended Video
கடந்த இரண்டு மாதங்களாக கேரளாவில் தனது அம்மாவுடன் இந்த லாக்டவுனை செலவிட்ட நடிகை அமலா பால், பல்வேறு புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வைரலாக்கினார்.
அமலா பாலுக்கு இரண்டாவதாக திருமணம் ஆனதா? இல்லையா? என மண்டையை பிய்துக்கும் படி ரசிகர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் வாய் திறக்கவே இல்லை.
மாம்பழம்.. டிராகன் ஃப்ரூட்
இந்நிலையில், தற்போது தனது தோழியுடன் வெளி உலகை காண காரில் செல்லும் புகைப்படங்களை பதிவிட்டுள்ள அமலா பால், அதற்கு கேப்ஷனாக கடந்த ஆண்டு ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, சந்தோஷ மாம்பழமாக தன்னைத் தான் உணர்வதாக குறிப்பிட்டு இருந்தேன். ஆனால், எல்லாம் வீணாகி விட்டது. தற்போது, கொஞ்சம் உஷாரா, ருசியான டிராகன் ஃப்ரூட் என சொல்லிக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
நேரா பியூட்டி பார்லருக்கா
டிராகன் ஃப்ரூட் சாப்பிட்டுக் கொண்டே காரில் செல்லும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள நடிகை அமலா பாலை ட்ரோல் செய்யும் கும்பல் சரியான நேரத்தில் ஆஜராகி உள்ளன. லாக்டவுன் தளர்வு காரணமாக "ஒரு வழியா பியூட்டி பார்லர் தொறந்தாச்சு போல" என அமலா பாலின் ஓவர் மேக்கப்பை பார்த்து கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.
உடம்புக்கு முடியலையா
அமலா பால் வெளியிட்டுள்ள இந்த புதிய புகைப்படங்களில், அவர் மிகவும் மெலிந்தது போல காணப்படுகிறார். அதனை பார்த்து வருத்தப்பட்ட மற்றொரு நெட்டிசன், ஓ மை காட், உங்களை பார்த்தால் நோயாளியை போலவே தெரிகிறது. உடம்புக்கு ஏதும் முடியலையா.. பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என கமெண்ட் செய்துள்ளார்.
நிலா குழந்தை
நேற்று நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், இஸ்லாமிய சகோதரர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை நடிகை அமலா பால் தெரிவித்து ஒரு பதிவை பதிவிட்டார். அதில், தான் ஒரு நிலா குழந்தை என்றும், நிலவை பார்க்கும் போது எல்லாம் நல்லதே நடக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











