ரசிகர்களின் ஆதரவால் நலமாக உள்ளேன், இறந்ததாக வந்த செய்தி வெறும் வதந்தி: எம்.எஸ். பாஸ்கர்
சென்னை: தான் நலமாக உள்ளதாகவும், தான் இறந்துவிட்டதாக வந்த செய்திகள் வெறும் வதந்தி என்றும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இறந்துவிட்டார் என்று வதந்தி பரவியது. சில இணையதளங்களில் அவர் இறந்துவிட்டதாகக் கூறி புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் இது குறித்து பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

அழுகை
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிய எனக்கு உறவினர்களும், ரசிகர்களும் போன் செய்து பேசினார்கள். என் குரலை கேட்டதும் அழுது கொண்டே நீங்கள் இறந்துவிட்டதாக செய்தி வெளியானதை பார்த்து தான் பதறிப் போய் அழைத்தோம் என்றார்கள்.

அதிர்ச்சி
நான் இறந்துவிட்டதாக என் புகைப்படத்துடன் கூடிய செய்தியை ஃபேஸ்புக்கில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

வதந்தி
நான் நலமாக இருக்கிறேன். அதனால் யாரும் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். ரசிகர்களின் ஆதரவில் நான் நலமாக உள்ளேன்.

பெரியவர்கள்
என் வீட்டில் வயதானவர்கள் உள்ளார்கள். அவர்கள் இது போன்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியில் அவர்களுக்கு ஏதாவது நடக்கலாம் என்பதை பிறர் உணர வேண்டும்.

12 படங்கள்
நான் நடித்துள்ள அரிமா நம்பி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது கமல் ஹாஸனின் உத்தமவில்லன் உள்பட 12 படங்களில் நடித்து வருகிறேன் என்றார் பாஸ்கர்.


Click it and Unblock the Notifications











