வீட்டுக்கு வாய்யா, உன்னை கொல்லாம விட மாட்டேன்: நடிகரை மிரட்டிய மனைவி
Recommended Video

மும்பை: வீட்டிற்கு வாங்க கொல்லாமல் விட மாட்டேன் என்று அக்ஷய் குமாரை அவரின் மனைவி ட்விங்கிள் கன்னா மிரட்டியுள்ளார்.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தி என்ட் இணையதள தொடரில் நடிக்கிறார். த்ரில்லர் தொடரான இது குறித்து அமேசான் பிரைம் வீடியோ அறிவிப்பு வெளியிட்டது.
அந்த நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் தன் மீது நெருப்பு வைத்துக் கொண்டு நடந்து வந்தார்.
அக்ஷய்
பாலிவுட்காரர்கள் ஏதாவது வித்தியாசமாக செய்து மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் குறியாக உள்ளனர். இந்நிலையில் அக்ஷய் இணையதள தொடருக்காக இப்படி நெருப்பாக வந்ததை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ட்விங்கிள்
உடம்பில் நெருப்புடன் இருந்த அக்ஷய் குமாரின் புகைப்படங்களை பார்த்த அவரின் மனைவி ட்விங்கிள் கன்னாவோ, வீட்டிற்கு வாங்க, உங்களை கொல்லப் போகிறேன் என்று மிரட்டி ட்வீட் செய்தார்.
வீடு
என்ன தான் படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அக்ஷயும் வீட்டில் மனைவிக்கு பயப்படுகிறார். மனைவியின் ட்வீட்டை பார்த்துவிட்டு தனது பயத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவர்.
நக்கல்
வீட்டிற்கு போன பிறகு உயிருடன் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்ய ஏதாவது ட்வீட் போடுங்கள் என்று நெட்டிசன்ஸ் அக்ஷய் குமாரை கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











