எனக்கு அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையா?: ராணா விளக்கம்
ஹைதராபாத்: தனக்கு அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்று வெளியான தகவல் குறித்து நடிகர் ராணா விளக்கம் அளித்துள்ளார்.
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் ஆஜானுபாகுவாக இருந்த ராணா தற்போது உடல் மெலிந்து எலும்பும், தோலுமாக உள்ளார். இந்நிலையில் ராணாவுக்கு சிறுநீரக பிரச்சனை என்றும், அதற்காக சிகிச்சை பெற அவர் தனது தாயுடன் அமெரிக்கா சென்றுள்ளார் என்றும் தெலுங்கு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டன.
அமெரிக்காவில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்கக்கூடும் என்றும் கூறப்பட்டது. இந்த செய்தியை பார்த்து ராணாவின் ரசிகர்கள் கவலை அடைந்தனர். உங்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதா என்று ரசிகர்கள் ராணாவிடம் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினார்கள்.

ராணா
ரசிகர்கள் தன்னை நினைத்து கவலைப்படுவதை பார்த்த ராணா விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு இணையதளம் ஒன்றில் உங்களின் உடல்நலம் குறித்த செய்தியை பார்த்தேன், உண்மையா என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு ராணாவோ, அது போன்றவற்றை படிப்பதை நிறுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ராணாவின் உடல்நலத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

அமெரிக்கா
ராணா அமெரிக்கா சென்றுள்ள நேரத்தில் அந்த செய்தி வெளியானதால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். இந்நிலையில் ராணாவின் விளக்கத்தை பார்த்த பிறகு நிம்மதி அடைந்துள்ளனர். ராணா பயங்கரமாக மெலிந்து காணப்படுவதும் ரசிகர்களை கவலைப்பட வைத்துள்ளது. அவர் ஒரு படத்திற்காகத் தான் இப்படி ஒல்லிக்குச்சி உடம்புக்காரர் ஆகிக் கொண்டிருக்கிறார், மற்றபடி எதுவும் இல்லை.

உடல் மெலிவு
ராணா நீங்க ஏன் நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போகிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர், எப்பொழுது பார்த்தாலும் மான்ஸ்டர் போன்று இருக்க முடியாது அல்லவா என்று காமெடியாக பதில் அளித்துள்ளார். ராணாவின் உடல் மெலிவு, அமெரிக்கா பயணத்தால் தான் ரசிகர்கள் பயந்துவிட்டனர்.
வாழ்த்து
ராணா தனிப்பட்ட வேலையாக அமெரிக்கா சென்றுள்ளார். சில நாட்களில் ஹைதராபாத் திரும்பிவிடுவாராம். நாளை வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் படத்தை அமெரிக்காவில் பார்க்கப் போவதாக தெரிவித்து படக்குழுவை வாழ்த்தியுள்ளார் ராணா. அமெரிக்காவில் இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் அவர்.


Click it and Unblock the Notifications











