தரமான சம்பவம்: சொன்னது ரஜினி செய்தது அஜித் போல #ViswasamFDFS
Recommended Video

சென்னை: விஸ்வாசம் படத்தை பார்த்தவர்கள் இம்பிரஸ் ஆகியுள்ளனர்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. விஸ்வாசம் தல ரசிகர்களுக்கு மட்டும் அல்ல குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அருண் விஜய்
#Viswasam நெத்தியடி...அஜித் சார் நடிப்பு அருமை. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். ரசிகர்களுடன் பார்த்து ரசித்தேன். கண்டிப்பாக பிளாக்பஸ்டர்... படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்துள்ளார் நடிகர் அருண் விஜய்.
ரசிகர்கள்
விஸ்வாசம் படம் பார்க்க அஜித் கெட்டப்பில் வந்த ரசிகைகள், ரசிகர்கள். மாஸ் தான்.
தல
ரொம்ப நாளைக்கு அப்புறம் தரமான சம்பவம். சிவா இயக்கத்தில் அஜித் நடித்த படங்களில் இது பெஸ்ட் என்கிறார்கள் ரசிகர்கள்.
பொங்கல் விருந்து
விஸ்வாசம் பெர்பெக்ட் பேக்கேஜ். அனைவருக்கும் சிறப்பான பொங்கல் விருந்து. ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட், மாஸ் காம்போ. #ViswasamReview #ViswasamThiruvizha #ViswasamFDFS


Click it and Unblock the Notifications











