காதலில் விழுந்த ஐஸ்வர்யா தத்தா... யாரை லவ் பண்றார் தெரியுமா?
நடிகை ஐஸ்வர்யா தத்தா தான் காதலில் விழுந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தான் காதலில் விழுந்துள்ளதாக நடிகை ஐஸ்வர்யா தத்தா தெரிவித்துள்ளார்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறியப்பட்டவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.
இதையடுத்து, மகத், ஆரி உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அலேகா, கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா, கன்னித்தீவு உள்ளிட்ட படங்கள் அவர் கைவசம் உள்ளன.

ஐஸ்வர்யாவும் யாஷிகாவும்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் இருந்து நடிகை யாஷிகாவும், ஐஸ்வர்யா தத்தாவும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். இருவரும் சேர்ந்து ஊர் சுற்றி வருகின்றனர்.
காதலில் விழுந்தேன்
இந்நிலையில், தான் காதலில் இருப்பதாக ஐஸ்வர்யா தத்தா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் தான் யாரை காதலிக்கிறேன் என்பதை சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
ரசிகர்கள் வாழ்த்து
அதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், "வாவ் சூப்பர். மகிழ்ச்சி டார்லிங். யார் அந்த அதிர்ஷ்டசாலி", என சிலர் கமெண்ட் செய்துள்ளனர். அதேசமயம் 'வட போச்சே' என சிலர் வருத்தப்பட்டும் உள்ளனர்.

காதலர் யார்?
சில மாதங்களுக்கு முன்பு பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கோபி என்பவர் தான் ஐஸ்வர்யா தத்தாவின் பாய் பிரண்ட் என பேசப்பட்டது. இந்நிலையில், தான் காதலில் விழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளதால், கோபியை பற்றி தான் டிவீட் செய்துள்ளாரோ என்ற பேச்சு அடிப்படுகிறது. இது தான் இப்போது கோலிவுட்டின் பேசு பொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











