அமலா பாலின் அடுத்த லவ்வர் இவர் தான்.. யார் இந்த டேனியல் வெல்லிங்டன்.. ஷாக்க குற.. ஷாக்க குற!
சென்னை: நடிகை அமலா பால் தனது புதிய காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
Recommended Video
அமலா பாலும், காதல்களும் என தனியாக புத்தகமே எழுதி விடலாம் போல, அந்த அளவுக்கு ஏகப்பட்ட சர்ச்சைகளும், சுவாரஸ்யங்களும் அவரது வாழ்வில் அடங்கி இருக்கிறது.
அமலா பால் மும்பை பாடகர் பவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்தாரா? இல்லையா? என தலையை பிய்த்துக் கொண்டு சிலர் அலையும் நிலையில், யாருடா இந்த டேனியல் வெல்லிங்டன் என்ற புதிய கேள்வி எழுந்து நிற்கிறது.

புதிய லவ்வர்
இப்படி தலைப்பிட்டதுமே உடனே ஆவலோடு வந்த உங்களை ஏமாற்றவே போகிறோம். ஆம், அமலா பால் தனது லவ்வர் டேனியல் வெல்லிங்டன் என குறிப்பிட்டு இருப்பது அவர் கையில் அணிந்திருக்கும் அந்த காஸ்ட்லியான வாட்ச்சை தான். பிரபல கைக்கடிகார பிராண்டான டேனியல் வெல்லிங்டனின் புதிய லுமின் வாட்சை அணிந்து கொண்டு "I'm in love with @danielwellington" என பதிவிட்டுள்ளார்.

பிளாக் ஏஞ்சல்
ஸ்லீவ்லெஸ் உடையில், செம கிளாமராகவும், க்யூட்டாகவும் பிளாக் ஏஞ்சல் போல அந்த விளம்பர போட்டோஷூட்டுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். சினிமா ஷூட்டிங் இல்லாத நிலையில், இதுபோன்ற விளம்பர ஷூட்டிங்கில் நடிகைகள் பங்கேற்று வருவது போல, நடிகை அமலா பாலும், வாட்ச் விளம்பரத்தில் பங்கேற்று இருக்கிறார்.

கேட் உமன்
நடிகை அமலா பாலின் இப்படியொரு அம்சமான போட்டோஷூட் புகைப்படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த ரசிகர்கள், எக்கச்சக்கமாக லைக்குகளை குவித்தும், கமெண்ட்டுகளை போட்டும் வருகின்றனர். செக்ஸி லேடி, பிளாக் அண்ட் ரெட் பியூட்டி, கேட் உமன் என ஏகத்துக்கும் வர்ணித்து வருகின்றனர்.

வாய்ப்பிருக்கா
இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த ஆடை படத்திற்கு பிறகு, அவர் நடிப்பில் உருவான படம் அதோ அந்த பறவை போல. கடந்த டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த படம், பின்னர், ஜனவரி 31ம் தேதிக்கு தள்ளிப்போனது, ஆனால், இன்னமும் அந்த படம் வெளியாகவில்லை. நடிகைகள் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார் படங்கள் ஆன்லைனில் வெளியாவதை போல அமலா பால் படமும் OTTல் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











