‘நயனுக்குக்கூட லேட்டாதான் கிடைச்சது, ஆனா எனக்கு சீக்கிரமாவே கிடைச்சுருச்சு’.. நடிகை பெருமிதம்

மிக மிக அவசரம் படத்தில் தனி நாயகியாக நடித்துள்ளார் நடிகை ஸ்ரீபிரியங்கா.

Recommended Video

தமிழ் பொண்ணுங்களுக்கு ஏன் வாய்ப்பு குடுக்க மாட்டிங்குறீங்க-நடிகை ஸ்ரீபிரியங்கா- வீடியோ

சென்னை: நடிகை நயன்தாராவுக்கு நீண்ட நாட்கள் கழித்து கிடைத்த வாய்ப்பு, தனக்கு குறுகிய காலத்திலேயே கிடைத்துவிட்டதாக நடிகை ஸ்ரீபிரியங்கா தெரிவித்துள்ளார்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக 'அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்' படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். நடிகை ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர்.

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு பாலபரணி ஒளிபதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் பாக்யராஜ், இயக்குனர் சேரன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜேகே ரித்தீஷ், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் பாபு கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

பெண் சிங்கம்:

பெண் சிங்கம்:

விழாவில் பேசி படத்தின் நாயகி ஸ்ரீபிரியங்கா, "நிறைய போராட்டங்களுக்கு பிறகு மிக மிக அவசரம் படத்தின் மூலம் மிகவும் துணிச்சலான தனி ஒரு பெண்ணாக பெண் சிங்கமாக இன்று நான் நின்றிருக்கிறேன். அதற்கு சுரேஷ் காமாட்சி சாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

என்னால் முடியும்:

என்னால் முடியும்:

எல்லோரும் ஏன் பெரிய படங்களில் நடிப்பதில்லை என கேட்கிறார்கள். இங்கே நிறைய பேருக்கு இந்த பெண் கதாநாயகியாக ஒரு முழுநீள படத்தையும் தாங்கிப் பிடிப்பாரா என்கிற சந்தேகம் இருக்கிறது. ஆனால் என்னால் முடியும்.

ஆஸ்கர் விருது மகிழ்ச்சி:

ஆஸ்கர் விருது மகிழ்ச்சி:

தமிழ் பெண்ணான எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் இருக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இன்றைக்கு படத்தின் போஸ்டர்களை வழியெங்கும் பார்த்துக் கொண்டு வரும்போது, இந்த விழாவில் இத்தனை ஜாம்பவான்கள் மத்தியில் இருக்கும்போது ஆஸ்கர் விருது வாங்கியது போல உணர்கிறேன்..

நம்ப வேண்டும்:

நம்ப வேண்டும்:

இந்த மாதிரி கதையும் கதாபாத்திரமும் நயன்தாராவிற்கு நீண்ட நாட்கள் கழித்து தான் கிடைத்தது. ஆனால் எனக்கு குறுகிய காலத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது. வெளியூரிலிருந்து வரும் கதாநாயகிகளின் திறமையை எந்தவிதத்தில் இங்கிருப்பவர்கள் கணித்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை. ஆனால் தமிழ் பெண்ணான என்னாலும் பெரிய நடிகருடன், பெரிய படங்களில் நடிக்க முடியும் என்பதை இங்கு இருக்கும் இயக்குனர்கள் தான் நம்ப வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X