என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்.. பிக் பாஸ் நடிகை மீது ஓட்டல் அதிபர் பரபரப்பு புகார்!

By

சென்னை: தன்னை திருமணம் செய்துகொண்டு பிக் பாஸ் நடிகை ஏமாற்றிவிட்டதாக ஓட்டல் அதிபர் ஒருவர், பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை பவித்ரா புனியா. சில படங்களிலும் பல டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ள இவர், இப்போது நடக்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பவித்ரா மறைக்கிறார்

பவித்ரா மறைக்கிறார்

முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், நடிகை பவித்ரா புனியாவுக்கும் தனக்கும் திருமணம் முடிந்துவிட்டது என்றும் அதை
அவர் மறைக்கிறார் என்றும் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் ஓட்டல் அதிபர் சுமித் மகேஸ்வரி கூறியுள்ளார்.

உறவு குறித்து

உறவு குறித்து

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன் பேசிய பவித்ரா, தனக்கும் நடிகர் பரத் சப்ரா மற்றும் பிரதீக் ஆகியோருடனான உறவு குறித்து கூறியிருந்தார். ஆனால், சுமித் பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த சுமித், இப்போது பவித்ரா தன்னை ஏமாற்றி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்பில் இருந்தார்

தொடர்பில் இருந்தார்

அவர் கூறியிருப்பதாவது: பவித்ராவுக்கும் எனக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பிறகு திருமணம் செய்துகொண்டோம். திருமணம் பற்றி வெளியில் யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று பவித்ரா சொன்னதால், நாங்கள் அறிவிக்கவில்லை. ஆனால், அவர் நான்கு பேருடன் தொடர்பில் இருந்தார்.

பச்சைக் குத்தினேன்

பச்சைக் குத்தினேன்

பரஸுடன் அவர் தொடர்பில் இருந்ததை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். பிறகு அவருக்கு நான் மெசேஜ் அனுப்பினேன். அதில், நாங்கள் இன்னும் விவாகரத்து செய்யவில்லை. அதுவரை காத்திருங்கள். இதில் என் குடும்பமும் சம்பந்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தேன். பவித்ரா மீதான காதலால், நான் அவர் பெயரை பச்சைக்குத்திக் கொண்டேன்.

இதுபோன்ற அவமானம்

இதுபோன்ற அவமானம்

அது இன்னும் அப்படியே இருக்கிறது. என்னிடம் எந்த மாற்றமும் இல்லை. திருமண நாளை கொண்டாடுவதற்கு நாங்கள் கோவா சென்றோம். அங்கு ஓட்டலில் இருந்தபோது, அதே ஓட்டலில் பரஸும் இருந்தார். இதுபோன்ற அவமானங்களை பலமுறை சந்தித்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தவறென உணர்ந்தேன்

தவறென உணர்ந்தேன்

இந்நிலையில் பரஸ் அளித்த பேட்டி ஒன்றில், 'பவித்ராவின் கணவர் அனுப்பிய மெசேஜை பார்த்ததும் அவரிடம் கேட்டேன், இது, உண்மையா? என்று. ஆமாம் என்றார் பவித்ரா. அது தவறு என்பதை உணர்ந்தேன். பிறகு பவித்ரா பற்றி பல தகவல்கள் கிடைத்தன. அதை சொன்னால் அவர் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் பேச விரும்பவில்லை' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X