திருமணமாகி, கர்ப்பமாக இருக்கிறேனா?: நடிகை இலியானா விளக்கம்
ஹைதராபாத்: தனக்கு திருமணமாகி, கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை இலியானா விளக்கம் அளித்துள்ளார்.
டோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலான இலியானா அமர் அக்பர் அந்தோணி படம் மூலம் மீண்டும் டோலிவுட்டுக்கு வந்துள்ளார்.
அவர் பாலிவுட்டில் செட்டிலான நேரத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனுடன் திருமணமாகி அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து இலியானா கூறியிருப்பதாவது,

பாலிவுட்
என் கெரியரை பொருத்தவரை மக்கள் அவர்களாக ஏதாவது நினைத்துக் கொள்கிறார்கள். நான் பர்ஃபி படத்தில் நடிக்க ஒப்பந்தமானவுடன் டோலிவுட்டை விட்டே செல்கிறேன் என்று வெளியான தகவல்கள் அதிர்ச்சி அளித்தது. அது ஆதாரமற்றவை. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனக்கு அடையாளம் கொடுத்த டோலிவுட்டை நான் எப்படி விடுவேன்?

நல்ல படம்
நான் ஜுலாயி படத்தில் நடித்தபோது பர்ஃபி இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் கதை சுவாரஸ்யமாக இருந்ததால் அதை மிஸ் பண்ண விரும்பவில்லை. அந்த படத்தை ஒப்புக் கொள்ளும் முன்பு நான் தெலுங்கு பட இயக்குனர் திரிவிக்ரமிடம் கூறினேன். என் கதாபாத்திரம் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பே அந்த படத்தை ஒப்புக் கொள்ளுமாறு என்னை வற்புறுத்தியவர் அவர் தான்.

டோலிவுட்
எனக்கு பாலிவுட்டில் சில நல்ல படங்கள் கிடைத்ததால் தெலுங்கு படங்களில் நடிக்க நேரம் இல்லை. ஒரு சமயத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுமாறு டோலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வந்தது. அதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் சரியான பட வாய்ப்புக்காக காத்திருந்தேன். அப்பொழுது தான் அமர் அக்பர் அந்தோணி பட வாய்ப்பு கிடைத்தது.

கர்ப்பம்
பல காலம் நினைவில் இருக்கும் படங்களில் நடிக்க விரும்புகிறேன். 20 வயதில் நடிக்க வந்தேன். தற்போது எனக்கு 32 வயதாகிறது. எனக்கு திருமணமும் ஆகவில்லை. நான் கர்ப்பமாகவும் இல்லை. மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிறகு நான் மனதளவில் வலுவாகிவிட்டேன். என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச விரும்பவில்லை என்கிறார் இலியானா.


Click it and Unblock the Notifications











