பிரபுதேவாவால் டென்ஷன், டென்ஷன், டென்ஷனோ டென்ஷனில் நடிகை
கொச்சி: பிரபு தேவாவுடன் நடனம் ஆட பதட்டமாக இருப்பதாக அமிரா தஸ்தூர் தெரிவித்துள்ளார்.
தனுஷின் அனேகன் படம் மூலம் கோலிவுட் வந்தவர் அமிரா தஸ்தூர். அவர் ஆதிக் ரவிச்சந்திரன் பிரபுதேவாவை வைத்து எடுத்து வரும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத அந்த படம் பல திருப்பங்களை கொண்ட த்ரில்லர் என்று கூறப்படுகிறது. இது குறித்து அமிரா கூறியதாவது,

வித்தியாசம்
நாங்கள் படப்பிடிப்பை துவங்கிவிட்டோம். நான் இதுவரை இந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளேன். எந்த மொழியிலும் நான் இது போன்ற ஒரு படத்தில் நடித்தது இல்லை. எங்களின் கதாபாத்திரங்கள், காட்சிகள் குறித்து இயக்குனர் ஆதிக் விபரமாக விளக்கினார். நான் ஹிட்ச்காக் படங்கள் பார்க்கத் துவங்கியுள்ளேன்.

திருப்பம்
என் கதாபாத்திரத்தின் தொழில் பற்றி நான் கூற முடியாது. அது தான் கதையில் முக்கிய திருப்பமே. என் கதாபாத்திரம் செக்சி, கிளாமராக, புத்திசாலியாக, பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கும். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நான் இதுவரை நடித்தது இல்லை. பிரபு மாஸ்டரின் கதாபாத்திரம் மிகவும் சவாலானது.

பிரபுதேவா
பிரபு மாஸ்டர் வெறித்தனமாக ஆடும் ஒரு பாடலை அண்மையில் படமாக்கினோம். அவர் ஆடியபோது மொத்த படக்குழுவும் அமைதியாக இருந்து அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தது. அவர் ஆடி முடித்த பிறகு நாங்கள் அனைவரும் கை தட்டினோம், தட்டினோம், தட்டிக் கொண்டே இருந்தோம்.

கொச்சி
பிரபு மாஸ்டருடன் சேர்ந்து டான்ஸ் ஆடுவதை நினைத்தாலே பதட்டமாக உள்ளது. என் ஸ்டெப்புகளை நான் நிச்சயம் மறப்பேன் என்று தெரியும். அவர் பக்கத்தில் நின்று அவருக்கு இணையாக ஆடுவது என்பதே பயமாக உள்ளது என்றார் அமிரா. அந்த படக்குழு தற்போது கொச்சியில் உள்ளது. அடுத்ததாக வெளிநாடு செல்ல உள்ளது.


Click it and Unblock the Notifications











