»   »  ஐஸ்வர்யா ராயை ரொமான்ஸ் செய்யணும்னு நினைத்தாலே கை, கால் உதறுது: நடிகர் பேட்டி

ஐஸ்வர்யா ராயை ரொமான்ஸ் செய்யணும்னு நினைத்தாலே கை, கால் உதறுது: நடிகர் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐஸ்வர்யா ராயை ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்பதை நினைத்தாலே பயந்து வருகிறது என பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் தெரிவித்துள்ளார்.

அதுல் மஞ்ச்ரேகர் இயக்கத்தில் அனில் கபூர், ராஜ்குமார் ராவ், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ஃபேனி கான். இந்த படத்தில் ராஜ்குமார் ராவ் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

முதலில் ராஜ்குமார் ராவ் கதாபாத்திரத்தில் மாதவன் நடிப்பதாக இருந்தது.

சம்பளம்

சம்பளம்

மாதவன் அதிக சம்பளம் கேட்டதால் அவரை விட்டுவிட்டு ராஜ்குமார் ராவை ஒப்பந்தம் செய்ததாக கூறப்பட்டது. ராஜ்குமார் ராவ் முதல் முறையாக ஐஸ்வர்யாவுடன் நடிக்கிறார்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

ஃபேனி கான் படத்தின் ஷூட்டிங் துவங்கி நடந்து வருகிறது. ராஜ்குமார் ராவ், அனில் கபூர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் படமாக்கி வருகிறார்.

தீபாவளி

தீபாவளி

ஐஸ்வர்யா, ராஜ்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் இனி தான் படமாக்கப்பட உள்ளது. தீபாவளிக்கு பிறகு ஐஸ்வர்யா ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறாராம்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ஐஸ்வர்யா ராயுடன் காதல் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பதை நினைத்தால் பயமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. உலகின் அழகான பெண்ணுடன் நடிப்பதால் இந்த பதட்டம் என்று ராஜ்குமார் ராவ் தெரிவித்துள்ளார்.

நேரம் இல்லை

நேரம் இல்லை

எனக்கு பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணத்தின் மீது நம்பிக்கை உள்ளது. படங்களில் திருமணம் செய்துள்ளேன். நிஜத்தில் திருமணம் செய்ய நேரம் இல்லை என்கிறார் ராஜ்குமார் ராவ்.

English summary
Actor Rajkumar Rao said he is both nervous and excited to romance Aishwarya Rai in his upcoming film 'Fanney Khan'. The 33-year-old actor is looking forward to start shooting for the movie, in which he is paired opposite the 'Ae Dil Hai Mushkil' star.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X