ஹலோ நான் செகண்ட் ஹீரோயின்லாம் இல்ல - மாளவிகா மோகனன் காட்டமான ட்வீட்

ஹைதராபாத்: பவன் கல்யாண் படத்தில் மாளவிகா மோகனன் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார் என வெளியான தகவலை அவர் மறுத்திருக்கிறார்.

மலையாளம் மற்றும் தமிழில் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருப்பவர் மாளவிகா மோகனன். இவர் கேரள திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரான மோகனனின் மகள் ஆவார். பிரபலத்தின் மகளாக இருந்தாலும் தனது திறமையால் திரையுலகில் தனக்கென இடம் பிடித்திருக்கிறார்.

மாளவிகா மோகனனின் திரையுலக என்ட்ரி

மாளவிகா மோகனனின் திரையுலக என்ட்ரி

மாளவிகா மோகனன் கடந்த 2013ஆம் ஆண்டு மலையாளர் படமான பட்டம் போலே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு நிர்நயகம், தி கிரேட் ஃபாதர் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் கன்னட நானு மட்டு வரலட்சுமி என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகிலும் அறிமுகமானார்.

தமிழில் இன்ட்ரோ ஆன மாளவிகா மோகனன்

தமிழில் இன்ட்ரோ ஆன மாளவிகா மோகனன்

மலையாளம் மற்றும் கன்னட திரையுலகில் அறிமுகமான மாளவிகா மோகனன் தமிழ் திரையுலகில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா. அந்தப் படம் ஓரளவு வெற்றி பெற மாளவிகா மோகனனுக்கு தமிழ் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

மாஸ்டரில் கமிட்டான மாளவிகா மோகனன்

மாஸ்டரில் கமிட்டான மாளவிகா மோகனன்

பேட்ட படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்தார். சாருலதா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த அவர் தனது நடிப்பை சிறப்பான முறையில் வெளிப்படுத்தினார். இதனால் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாஸ்டர் படத்துக்கு பிறகு கார்த்திக் நரேன் தனுஷை வைத்து இயக்கிய மாறன் பட வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.

தெலுங்கில் இண்ட்ரோ ஆகும் மாளவிகா மோகனன்

தெலுங்கில் இண்ட்ரோ ஆகும் மாளவிகா மோகனன்

தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் காலடி எடுத்து வைத்த மாளவிகா மோகனன் அடுத்ததாக தெலுங்கு திரையுலகிலும் நுழைந்திருக்கிறார். ஆனால் எந்தப் படத்தில் கமிட்டாகியிருக்கிறார், யார் ஹீரோ என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் பிரபாஸின் படத்தில்தான் மாளவிகா மோகனன் ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார் என கூறப்படுகிறது.

என்னது நான் செகண்ட் ஹீரோயினா? மாளவிகா மறுப்பு

என்னது நான் செகண்ட் ஹீரோயினா? மாளவிகா மறுப்பு


இந்நிலையில் பவன் கல்யான் நடிக்கும் உஸ்தாத் பகத் சிங் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக மாளவிகா மோகனன் கமிட்டாகியிருக்கிறார் என்று சமீபத்தில் செய்தி வெளியானது. இதனை மறுத்து அவர் செய்திருக்கும் ட்வீட்டில், "பவன் கல்யாண் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன் நான் பவன் கல்யாணின் படத்தில் இல்லை. நான் மற்றொரு அற்புதமான தெலுங்கு படத்தில் நடித்துவருகிறேன்.

அதிலும் நான் முதல் ஹீரோயினாகத்தான் நடிக்கிறேன் இரண்டாவது ஹீரோயினாக இல்லை. அதுதான் நான் தெலுங்கில் அறிமுகமாகும் படம்" என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X