விஜய் செய்வதை நான் செய்யக் கூடாதா?: சிவகார்த்திகேயன்
சென்னை: விஜய் சார் நல்ல விஷயங்களையே செய்வார். அவர் செய்கிறார் என்பதற்காக அந்த நல்ல விஷயங்ளை நான் செய்யாமல் இருப்பது சரி அல்ல என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் 22ம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்தின் தமிழக வினியோக உரிமை சுமார் ரூ.60 கோடி வரை சென்றுள்ளது.
இது அஜீத், விஜய் படங்களுக்கு நிகரான வியாபாரம்.

விஜய்
சில விஷயங்களில் சிவகார்த்திகேயன் விஜய்யை காப்பியடிப்பதாக பேச்சு உள்ளது. குட்டீஸ்களை விஜய் தம் பக்கம் ஈர்த்தார். விஜய்யை பின்பற்றி சிவகார்த்திகேயன் தற்போது குட்டீஸ்களின் ஹீரோவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.

பார்ட்டி
வேலைக்காரன் பட வேலைகள் முடிந்த பிறகு சிவகார்த்திகேயன் பார்ட்டி கொடுத்தார். இந்த விஷயத்திலும் அவர் விஜய்யை காப்பியடிப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.

நல்ல காரியம்
விஜய் சார் நல்ல விஷயங்களையே செய்வார். அவர் செய்கிறார் என்பதற்காக அந்த நல்ல விஷயங்ளை நான் செய்யாமல் இருப்பது சரி அல்ல. அவரை காப்பியடித்து நான் இப்படி செய்யவில்லை என்று சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்
வேலைக்காரன் படத்தின் வியாபாரத்தை பார்த்து கோலிவுட் மிரண்டு போயுள்ளது. சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சி பல முன்னணி ஹீரோக்களை கலக்கம் அடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











