அம்மாவுக்கு கேன்சர்னு அழுதபோது அப்படி வந்து கேட்கலாமா?: நித்யா மேனன்

By Siva

Recommended Video

Nithya Menen: தயாரிப்பாளர்களை அவமதித்த புகார் குறித்து நித்யா மேனன் விளக்கம்- வீடியோ

சென்னை: தயாரிப்பாளர்களை அவமதித்த புகார் குறித்து நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார்.

மலையாள தயாரிப்பாளர்கள் சிலரை நித்யா மேனன் அவமதித்ததாக முன்பு புகார் எழுந்தது. இதையடுத்து நித்யா மேனன் திமிர் பிடித்தவர் என்று மல்லுவுட்டில் பேசினார்கள். அவர் மலையாள படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.

நித்யா அண்மையில் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் தடை பற்றி அவர் கூறியதாவது,

அம்மா

அம்மா

நான் டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் தள்சமயம் ஒரு பெண் குட்டி படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் அம்மாவுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அதுவும் 3வது ஸ்டேஜில் இருந்தது. எனக்கு அப்பொழுது மைக்ரேன் பிரச்சனை உச்சத்தில் இருந்தது.

அழுகை

அழுகை

தள்சமயம் ஒரு பெண்குட்டி படத்தில் நடித்தபோது பிரேக்குகளில் அறைக்குள் சென்று அம்மாவை நினைத்து அழுவேன். நான் மைக்ரேனால் அவஸ்தை பட்டதுடன் என் அம்மாவை நினைத்து அழுது கொண்டிருந்தபோது அபாயின்மென்ட் இல்லாமல் சில தயாரிப்பாளர்கள் என்னை பார்க்க வந்தனர். அவர்கள் யார் என்று கூட எனக்குத் தெரியாது.

படம்

படம்

எனக்கு உடல்நலம் சரியில்லாததாலும், படப்பிடிப்பு இருந்ததாலும் பின்னர் பேசலாம் என்று அந்த தயாரிப்பாளர்களிடம் தெரிவித்தேன். இது அவர்களின் ஈகோவை தொட்டுவிட்டது. நான் அவர்களுடன் பேசாததால் நான் திமிர் பிடித்தவள் என்று அந்த தயாரிப்பாளர்கள் வெளியே சொல்லிவிட்டனர்.

தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்கள்

எனக்கு இல்லை அவர்களுக்கு தான் ஈகோ பிரச்சனை. அந்த சம்பவத்தை நினைத்து கவலைப்பட்டது உண்டு. அதன் பிறகு இதற்கெல்லாம் கவலை பட்டால் வேலைக்கு ஆகாது என்று படங்களில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டேன் என்கிறார் நித்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X