'பேஸ்புக்கில் என் பெயரில் மோசடி!' - சௌந்தர்யா விளக்கம்

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, பெயரில் பேஸ்புக்கில் தனிப் பக்கம் உருவாக்கப்பட்டு, அதில் சௌந்தர்யா படம், அவரது குடும்பத்தினர் படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சௌந்தர்யாவே ரசிகர்களுடன் பேசுவது போல, அவரது கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன.
சௌந்தர்யா ஆர் அஸ்வின் என்ற பெயரில் உள்ள இந்தக் கணக்கை தினமும் அப்டேட் செய்வதால், இது ஒரிஜினல் சௌந்தர்யாதான் என நம்பி பலரும் கருத்து எழுதி வருகின்றனர்.
ஆனால் இப்போது அதனை மறுத்துள்ளார் சௌந்தர்யா. தான் ட்வி்ட்டர் தளத்தில் மட்டுமே எழுதி வருவதாகவும், பேஸ்புக்கில் தன் பெயரில் யாரோ மோசடி செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே இதுகுறித்து அவர் விளக்கம் அளித்திருந்தார். மேலும் ஐஸ்வர்யா, தனுஷ் பெயர்களிலும் இதுபோன்ற கணக்குகள் பேஸ்புக்கில் உள்ளன.
Comments


Click it and Unblock the Notifications