சிரஞ்சீவி மருமகனை காதலிக்கிறேனா?: ரெஜினா விளக்கம்

By Siva

சென்னை: தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜுடன் காதல் என்று கிளம்பிய பேச்சு குறித்து நடிகை ரெஜினா கசான்ட்ரா விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரியின் மகன் சாய் தரம் தேஜ் ஹீரோவாக அறிமுகமான பிள்ளா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் ரெஜினா கசான்ட்ரா அவருக்கு ஜோடியாக நடித்தார்.

அதில் இருந்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக பேசப்படுகிறது.

காதல்

காதல்

கடந்த சில நாட்களாக எனக்கும், சக நடிகர் ஒருவருக்கும் இடையே காதல் என்று செய்திகள் வெளியாகின. அந்த செய்திகளில் உண்மை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவை ஆதாரமற்ற வதந்தி என்று தெரிவித்துள்ளார் ரெஜினா.

படம்

படம்

என் வாழ்வில் தற்போது உள்ள ஒரே காதல் என் வேலை தான். அதை தவிர வேறு எந்த காதலும் இல்லை. நான் காதலித்தால் நானே உங்களிடம் தெரிவிப்பேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி என்று ரெஜினா கூறியுள்ளார்.

நண்பர்கள்

நண்பர்கள்

நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்று முன்பு கூறி வந்தனர் ரெஜினாவும், சாய் தரம் தேஜும். கடந்த 2017ம் ஆண்டு அவர்களின் காதல் பற்றி அடிக்கடி பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இருவருமே மறுத்துள்ளனர்.

 காதல் முறிவு

காதல் முறிவு

ரெஜினாவுக்கும், சாய் தரம் தேஜுக்கும் இடையே பிரச்சனை என்று தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது. அதனால் தான் தங்களுக்கு இடையே காதல் எல்லாம் இல்லை என்று இருவரும் மாறி மாறி விளக்கம் அளித்து வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X