கிரிக்கெட் வீரர் ராகுலை காதலிக்கிறேனா?: ஆர்யா ஹீரோயின்
மும்பை: கிரிக்கெட் வீரர் கே. எல். ராகுலை காதலிப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை சோனல் சவுகான் விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகைகள், கிரிக்கெட் வீரர்களை காதலிப்பது புதிது அல்ல. அப்படி சிலர் கிரிக்கெட் வீரர்களை காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட் நடிகை சோனல் சவுகானும், கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து சோனல் சவுகனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,
எனக்கும், கே. எல். ராகுலுக்கும் இடையே காதல் எல்லாம் இல்லை. அவர் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர், திறமையானவர், பழக இனிமையானவர். நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்றார்.
கே.எல். ராகுலின் பெயர் பாலிவுட் பிரபலத்துடன் சேர்த்து அடிபடுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக நடிகை நிதி அகர்வாலுக்கும், ராகுலுக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. அப்படி ஒன்றும் இல்லை என்று பதறிப் போய் விளக்கம் அளித்தார் நிதி.
மேலும் நடிகை ஆலியா பட்டின் தோழி ஆகான்ஷா ரஞ்சனின் பெயரும் ராகுலுடன் சேர்ந்து அடிபட்டது. ஆகான்ஷாவும் ராகுலுடன் காதல் இல்லை என்று தெரிவித்தார்.
ஆர்யா, அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சோனல் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தமிழ், இந்தி தவிர தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிக்க வந்து 11 ஆண்டுகள் ஆகியும் அவரால் முன்னணி நடிகை அந்தஸ்தை பெற முடியவில்லை.
இதற்கிடையே கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை திருமணம் செய்த பிறகு அனுஷ்காவின் கெரியர் அடிவாங்கிக் கொண்டிருப்பதாக விமர்சனம் எழுந்தது. தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நான் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று அனுஷ்கா சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்களுடன், பிரபல பாலிவுட் நடிகைகளின் பெயர்கள் அடிபடுவது சாதாரண விஷயமாகிவிட்டது. கேப்டன் விராட் கோஹ்லி மட்டும் அல்ல கிரிக்கெட் வீரர்கள் ஜாஹீர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோரும் பாலிவுட் நடிகைகளை தான் திருமணம் செய்துள்ளனர். நம்ம யுவராஜ் சிங்கும் நடிகையை தான் மணந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











