லட்சுமி ராமகிருஷ்ணனை சும்மா விடமாட்டேன்.. இனி பஞ்சாயத்தே பண்ணக் கூடாது.. நடிகை வனிதா கிர்ர்ர்!

By

சென்னை: லட்சுமி ராமகிருஷ்ணனை சும்மா விட மாட்டேன் என்று நடிகை வனிதா கூறியுள்ளார்.

Recommended Video

Vanitha VijayKumar செய்யும் சூழ்ச்சி • கலங்கும் குடும்பம்

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.

முறையாக விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார்.

100 நாள் வேலை வாய்ப்புக்கு குறைகிறதா மவுசு... காரணம் என்ன?

சூரியா தேவி

சூரியா தேவி

இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் நடிகை வனிதாவுக்கு எதிராகவும் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். வனிதாவின் திருமணம் குறித்து சூரியாதேவி என்பவரும் நடிகை கஸ்தூரி, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

நீ என்ன பத்தினியா?

நீ என்ன பத்தினியா?

அவர்களை கடுமையாகச் சாடி, சமூக வலைதளப் பக்கத்தில் பதில் அளித்திருந்தார் வனிதா. இது பரபரப்பானது. இந்த விவகாரம் தொடர்பாக, மீடியா ஒன்று நடிகை வனிதாவையும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனையும் நேரலையில் பேச வைத்தது. இதில் பேசிய நடிகை வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை அநாகரிகமாகப் பேசினார். ஒரு கட்டத்தில், வாடி போடி என்று அழைக்கத் தொடங்கிய வனிதா, நீ என்ன பத்தினியா? ஒரு புருஷன் இருந்தா, நீ ஒழுங்கா?' என்று ஆவேசமானார்.

தரக்குறைவாக

தரக்குறைவாக

இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதுபற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், 'நூறு கணவர் வேண்டுமானாலும் இருக்கட்டும். கவலையில்லை. ஆனால், வெறொரு பெண்ணின் கணவராக இருக்கக் கூடாது' என்று கூறியிருந்தார். இவருக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரியும் பேசியிருந்தார். இதனால் நடிகை வனிதா, கஸ்தூரியையும் விளாசினார். முட்டாள், காமெடி பீஸ் என தரக்குறைவாக விளாசிய வனிதா, அவரை பிளாக் செய்துவிட்டதாக அறிவித்தார்.

வக்கீல் நோட்டீஸ்

வக்கீல் நோட்டீஸ்

இதையடுத்து தன்னைப் பற்றி அநாகரிகமாக பேசியதற்காக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். அதனால் தனது நஷ்ட ஈடாக ரூ. 1.25 கோடி தரவேண்டும் என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை வனிதாவும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

சும்மா விடமாட்டேன்

சும்மா விடமாட்டேன்

இடையில் சில நாட்கள் சோசியல் மீடியாவில் அமைதியாக இருந்த இந்த பிரச்னை, இப்போது மீண்டும் வெடித்துள்ளது. ஒரு நெட்டிசன் லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றி சொன்னதற்கு நடிகை வனிதா காட்டமாகப் பதிலளித்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணனை நான் சும்மா விடமாட்டேன். இனி அவர் எந்த பஞ்சாயத்து நிகழ்ச்சிகளையும் மீண்டும் நடத்தக் கூடாது என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

அவர்கள் காமெடியர்கள்

அவர்கள் காமெடியர்கள்

இன்னொருவர் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, நாஞ்சில் விஜய் ஆகியோரின் விளையாட்டு முடிந்தது என்று கூறியுள்ளார். இதற்குப் பதில் அளித்துள்ள நடிகை வனிதா, அது விளையாட்டு இல்லை. அவர்கள் காமெடியர்கள் என்று கிண்டலாகக் கூறியுள்ளார். இதற்கு கஸ்தூரியோ, லட்சுமி ராமகிருஷ்ணனோ இன்னும் பதில் சொல்லவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X