நான் நண்பேன்டா, லவ்வர்டா இல்லை: ஆர்யா

By Siva

சென்னை: தான் யாரையும் காதலிக்கவே இல்லை என்று நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

நயன்தாரா பிரபுதேவாவிடம் இருந்து பிரிந்த பிறகு அவருக்கும், ஆர்யாவுக்கும் காதல் என்று கூறப்பட்டது. ஆர்யா தான் நயனுக்கு ஆறுதலாக உள்ளார். படத்தில் போலவே நிஜத்திலும் அவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதென்று எல்லாம் செய்தி வந்தது.

இந்நிலையில் ராஜா ராணி படத்தை விளம்பரப்படுத்த நயன், ஆர்யாவுக்கு கல்யாணம் என்று வேறு விளம்பரம் கொடுத்தார்கள். ரசிகர்கள் அனைத்தையும் கூட்டிக் கழித்து ஒரு முடிவுக்கு வந்தனர்.

அனுஷ்கா

அனுஷ்கா

ஆர்யாவின் பெயர் நயன்தாராவுடன் சேர்ந்து அடிபடுகையில் திடீர் என்று அனுஷ்காவுடன் கோர்க்கப்பட்டது. ஆர்யாவும், அனுஷ்காவும் ஓவர் நெருக்கமாக உள்ளார்கள், கன்ஃபர்ம் காதல் தான் என்று பேசப்பட்டது.

லவ் இல்லை

லவ் இல்லை

அனுஷ்காவும் தானும் நல்ல நண்பர்கள் என்றும், தங்களுக்குள் காதல் இல்லை என்றும் ஆர்யா தெரிவித்துள்ளார். ஆர்யா உங்களுக்கு தெரியாதது இல்லை எல்லா காதலர்களும் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்ற டயலாக்கை தான் கூறுகின்றனர்.

இரண்டாம் உலகம்

இரண்டாம் உலகம்

இரண்டாம் உலகம் படப்பிடிப்பில் ஒன்றரை ஆண்டுகளாக ஒன்றாக நடித்ததில் அனுஷ்காவுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. அதனால் தான் சிங்கம் 2 பார்ட்டிக்கு என்னை அழைத்தனர். ஆனால் நானும், அனுஷ்காவும் பார்ட்டிக்கு ஜோடியாக சென்றோம் என்றும், குத்தாட்டம் போட்டோம் என்றும் தவறான செய்தி பரவியுள்ளது என்றார் ஆர்யா.

நண்பேன்டா

நண்பேன்டா

நான் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவன். நட்பின் அடிப்படையில் தான் யாருடனும் நெருக்கமாக பழகுவேன். அதைப் பார்த்துவிட்டு காதல், கத்தரிக்காய் என்பது வேடிக்கையாக உள்ளது என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X