அசோக் செல்வனை காதலிக்கிறேனா?: சூப்பர் சிங்கர் பிரகதி விளக்கம்

By Siva

Recommended Video

சூப்பர் சிங்கர் பிரகதிக்கும், அசோக் செல்வனுக்கும் விரைவில் திருமணமா?

சென்னை: அசோக் செல்வனுடன் காதல், திருமணம் என்று வெளியான செய்திகளை பார்த்துவிட்டு பிரகதி விளக்கம் அளித்துள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பிரகதியும், நடிகர் அசோக் செல்வனும் காதலிப்பதாக முதலில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் அதிக அளவில் வலம் வந்தன.

இந்நிலையில் இது குறித்து பிரகதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த போஸ்டில் அவர் கூறியிருப்பதாவது,

திருமணம்

திருமணம்

நான் யாரையும் காதலிக்கவில்லை, திருமணம் செய்யப் போவதும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு 21 வயது தான் ஆகிறது. கல்லூரியில் படித்துக் கொண்டே பாடும் நான் திருமணம் செய்யும் இடத்தில் இல்லை.

பெருமை

பெருமை

என் ரசிகர்களுடான உறவை நினைத்து பெருமையாக உள்ளது. நான் காதலித்தால் அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். என் நெருக்கமான நட்பை பற்றி ஒரு செய்தி வெளியானதால் இந்த கதை ஆரம்பித்தது.

மீடியா

மீடியா

காதல் செய்தியை பார்த்து முதலில் காமெடியாக இருந்தது. ஆனால் அனைத்து ஊடகங்களும் இது குறித்து செய்தி வெளியிடவே நான் அதிருப்தி அடைந்தேன். என்னை பற்றி மீடியா தவறான தகவலை பரப்புவதால் அதிருப்தி அடைந்துள்ளேன்.

அசோக்

அசோக்

அசோக் மற்றும் என்னுடைய வெற்றிகளை பற்றி செய்தி வெளியிடாமல் எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறான செய்தி வெளியானதில் அதிருப்தி அடைந்துள்ளேன். மீடியாக்களுடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. பேட்டிகள் அளிப்பது, பத்திரிகையாளர்களுடன் பேசுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். ஆனால் இன்று அவர்களே ஆதாரமில்லாத செய்தியை வெளியிட்டது அதிருப்தி அளிக்கிறது.

நன்றி

இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்களின் அன்பையும், ஆதரவையும் பெற நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை என பிரகதி தெரிவித்துள்ளர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X