twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எவன் கெளப்பி விடுறான்னே தெரியலையே: விஷால் தம்பி கோபம்

    By Siva
    |

    பெங்களூர்:

    கே.ஜி.எஃப். படம் புகழ் யஷ் கவலையும், கோபமும் படும்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    கே.ஜி.எஃப். படம் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்டார் கன்னட நடிகர் யஷ். கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்திற்காக அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்நிலையில் யஷை கொலை செய்ய ரவுடிகள் திட்டமிட்டதாக தகவல் தீயாக பரவியது.

     எங்கப்பா டி.ஜி.பி. ஆகிட்டாரு: விஷ்ணு விஷால் ஹேப்பி எங்கப்பா டி.ஜி.பி. ஆகிட்டாரு: விஷ்ணு விஷால் ஹேப்பி

    யஷ்

    யஷ்

    கன்னட திரையுலகை சேர்ந்த ஸ்டார் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்ட ஒரு குழுவை சேர்ந்த 4 பேரை பெங்களூர் போலீசார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். அந்த ஸ்டார் யஷ் என்று ஒரு தகவல் பரவியது. சிலரோ கன்னட திரையுலகை சேர்ந்த ஒருவர் தான் யஷை கொலை செய்ய ரவுடிகளை அனுப்பியதாக பேசத் துவங்கிவிட்டனர்.

    நடிகர்

    நடிகர்

    யஷை கொலை செய்யத் திட்டமிட்டதாக தகவல் பரவியதை அடுத்து பலரும் அவருக்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளனர். யஷின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அவரது குடும்பத்தார், நண்பர்கள், ரசிகர்கள் கவலை அடைந்தனர். இந்நிலையில் யஷ் மீடியாவை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

    போலீஸ்

    போலீஸ்

    நான் கூடுதல் கமிஷனர் அலோக் குமார் மற்றும் உள்துறை அமைச்சர் பாட்டில் ஆகியோரிடம் பேசினேன். நான் ரவுடிகளின் ஹிட் லிஸ்ட்டில் இல்லை என்று அவர்கள் எனக்கு உத்தரவாதம் அளித்துள்ளார்கள் என்கிறார் யஷ்.

    ரவுடி

    ரவுடி

    ஒவ்வொரு முறையும் ஒரு ரவுடி கைதாகும்போது என் உயிருக்கு ஆபத்து என்ற வதந்தி பரவுகிறது. நான் ஒன்றும் ஆடு இல்லை எளிதில் வெட்ட. என் பலம் எனக்கு தெரியும். இந்த வதந்திகளால் ஏதாவது நடக்குமோ என்று கவலையாக உள்ளது. மீடியாவுக்கு தவறான தகவல் அளிப்பது யார் என்று வியக்கிறேன். ரவுடி கைதாகும்போது எல்லாம் என் உயிருக்கு ஆபத்து என்ற வதந்தியை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் யஷ். யஷின் கே.ஜி.எஃப்.(தமிழ்) படத்தை தமிழகத்தில் வெளியிட்ட விஷால் அவரை தனது தம்பியாக பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    KGF star Yash has made it clear that he is not on the hit list of gangters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X