96 பட தெலுங்கு ரீமேக்கில் ஜானுவாக நடிக்கிறேனா?: சமந்தா விளக்கம்
ஹைதராபாத்: 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் நடிக்கவில்லை என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. 96 படம் ஓடும் தியேட்டர்களில் இன்னும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

தெலுங்கு ரீமேக்
96 படம் ரிலீஸாவதற்கு முன்பே அதை தெலுங்கில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் தில் ராஜு முடிவு செய்துவிட்டார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. தெலுங்கு ரீமேக்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நானியும், த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடிப்பதாக செய்திகள் வெளியானது.

சமந்தா
96 ரீமேக் படத்தில் ஜானுவாக நடிக்கிறீர்களாமே என்று ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் ட்விட்டரில் கேட்க அவரோ இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் 96 போன்ற அற்புதமான படத்தை எல்லாம் ரீமேக் செய்யக் கூடாது என்கிறார் சமந்தா. அவர் சொல்வது மிகச் சரியே. 96 படத்தை அப்படியே ரசித்தால் தான் நல்லது.

நடிப்பு
96 படத்தில் த்ரிஷாவுக்கு பெரிதாக மேக்கப் கிடையாது, டிசைனர் உடைகள் கிடையாது. தனது முகபாவனைகளால் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார். த்ரிஷாவின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத கதாபாத்திரமாக ஜானு அமைந்துவிட்டது.

காமெடி
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தை தெலுங்கில் நாக சைதன்யா, ஸ்ருதி ஹாஸனை வைத்து ரீமேக் செய்தார்கள். நாக சைதன்யாவும், ஸ்ருதியும் நன்றாக நடித்திருந்த போதிலும் ஒரிஜினல் படம் அளவுக்கு இல்லை என்று தான் ரசிகர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











