கத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்
சென்னை: வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த கபிர் துஹான் சிங்கிடம் இருந்து நாம் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கபிர் துஹான் சிங் அஜித்தின் வேதாளம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அவர் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து கபிர் ட்விட்டரில் அதுவும் தமிழில் விளக்கம் அளித்துள்ளார்.
கபிர்
என் இனிய நண்பர்கள் ... நான் விஸ்வசம் ( அஜித் ஸிர் படம்) படத்தில் நடிக்கவில்லை...
நான் தற்பொழுது காஞ்சனா 4 மற்றும் நடிகர் சித்தார்த் உடன் நடுகேரன் ...
நன்றி அன்புடன்
கபிர்... என்று ட்வீட்டியுள்ளார் கபிர் துஹான் சிங்.
பாராட்டு
வட நாட்டவராக இருந்தாலும் முயற்சி செய்து தமிழில் ட்வீட்டியுள்ளார் அதை பாராட்டியே ஆக வேண்டும். எழுத்துப் பிழைகள் இருந்தாலும் அவரின் ஆர்வத்தை தான் பார்க்க வேண்டும்.
கிண்டல்
கபிரின் முயற்சியை பாராட்டாவிட்டாலும் இது போன்று கிண்டல் செய்யாமல் இருக்கலாமே. தமிழ் தெரிந்தும் பலர் ஆங்கிலத்தில் ட்வீட் செய்யும்போது கபிர் தமிழில் எழுத முயன்றது தவறு இல்லையே.

விஸ்வாசம்
விஸ்வாசம் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தில் அப்பா அஜித்துக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











