நான் சரியானவளாக இல்லாமல் இருக்கலாம்.. ஆனால்.. நடிகை ஷாலு ஷம்மு போட்ட அதிரடி போஸ்ட்!
சென்னை: காமெடியில் இருந்து கவர்ச்சிக்கு மாறிய நடிகை ஷாலு ஷம்முவின் கேப்ஷன் ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.
சமூக வலைதளங்களில் புதிது புதிதாக ஃபேஷன் போட்டோஷூட் நடத்தி கலக்கி வருகிறார் ஷாலு ஷம்மு.
சமீபத்தில் மேலாடை அணியாமல் அவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார் ஷாலு ஷம்மு. மேலும், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகையாக நடித்துள்ளார்.

காமெடி டு கவர்ச்சி
காமெடி நடிகையாக கலக்கி வந்த இவர், இரண்டாம் குத்து படத்திற்கு பிறகு கவர்ச்சி நடிகையாக மாறியுள்ளார். மாடலிங்கில் அதிகளவு ஆர்வமும் ஆசையும் இருப்பதால் புதுசு புதுசாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.

மேலாடை அணியாமல்
காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை ஷாலு ஷம்மு மேலாடை அணியாமல் வெறும் பூக்களை வைத்து முன்னழகை மறைத்தபடி நடத்திய டாப்லெஸ் போட்டோஷூட் ஏகப்பட்ட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. இதற்கு முன் இல்லாத அளவுக்கு அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

விழுந்துடப் போறீங்க
கவர்ச்சிகரமாக போட்டோக்களை போட்டு வந்த ஷாலு ஷம்மு சமீபத்தில் சிகப்பு நிற சுடிதார் அணிந்து மரப் பாலம் ஒன்றின் மீது நடந்து வந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், ஜாக்கிரதையா வாங்க, விழுந்துடப் போறீங்க என அக்கறையுடன் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு வைரலாக்கினர்.

சரியானவள் இல்லை
இந்நிலையில், சிகப்பு நிற டாப்ஸ் மற்றும் நீல நிற குட்டி ஷார்ட்ஸ் மட்டுமே போட்டுக் கொண்டு செம கேஷ்வலாக ஒரு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் ஷாலு. மேலும், அந்த புகைப்படத்துடன் அவர் கொடுத்திருக்கும் அதிரடியான கேப்ஷன் தான் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

போலி கிடையாது
அந்த கேப்ஷனில் நான் பர்ஃபெக்ட் ஆக இல்லை என்றாலும் போலியானவள் கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார். ஹோட்டல் ஒன்றின் வெளியே எடுத்த இந்த போட்டோவை போட்டு இப்படியொரு கேப்ஷனை கொடுத்துள்ள ஷாலு ஷம்முவை பார்த்த பலரும் சூப்பரான கேப்ஷன் என பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











