எனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா
Recommended Video

சென்னை: தனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகவில்லை என்று நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார்.
கிக்ஆஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் அதர்வா தயாரித்து நடித்துள்ள படம் 'செம போத ஆகாதே'. பத்ரி வெங்கடேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார். புதுமுகம் மிஸ்டி இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

மனோபாலா, கருணாகரன், ஜான் விஜய், யோகிபாபு, பிரின்ஸ், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கேஎல் படத்தொகுப்பு பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த படம் வரும் 29ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் செம போத ஆகாதே படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினர். கல்யாணம் எப்போது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தனக்கு இன்னும் கல்யாண வயசு வரவில்லை என அதர்வா கூறினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, " பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பேசும்போது தயாரிப்பாளர்கள் பலர், தங்கள் கஷ்டங்களை கூறுவர். அப்போது நான் நினைப்பேன், ஏன் இவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று. ஆனால் இப்போது தான் தெரிகிறது, ஒரு படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்பது.
படத்தை எடுத்து ரிலீஸ் செய்வது மிகப்பெரிய போராட்டம். ஏற்கனவே ரிலீஸ் செய்ய வேண்டிய நிலையில் மற்றவர்களுக்கு உதவ வேண்டியதாகப் போய்விட்டது. ஆஈனால் அதற்காக வருத்தப்படவில்லை.
இயக்குனர் பத்ரி வெங்கடேஷை எனக்கு பானா காத்தாடியில் இருந்து தெரியும். இப்போது இந்த படத்தை மிக ஜாலியான படமாக அவர் எடுத்துள்ளார். படம் நிச்சியமாக செம எண்டர்டெயினராக இருக்கும்.
ரொம்ப நாளா சீரியஸ் படங்களே செய்து கொண்டிருந்ததால், இப்போது முழு எண்டர்டெயினர் படம் தந்துள்ளேன். ஒரு நல்ல படம் எடுத்த திருப்தி, சந்தோஷம் இருக்கிறது.
செம போத ஆகாத படம் மதுப்பழக்கத்தையோ அல்லது போதையையோ ஊக்குவிக்கவில்லை. ஒருவன் அதிகமாக குடித்துவிட்டு, செம போதையில் ஒரு முட்டாள் தனமான முடிவு எடுக்கிறான். அதன் விளைவுகள் என்ன என்பதை சொல்லும் படம் இது" என்றார்.
அப்போது, கல்யாண அறிவிப்பு எப்போது வரும் என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, " எனக்கு இன்னும் கல்யாண வயசு வரவில்லை" என்று அதர்வா பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications











