கத்தி கதறியும் ஒன்றும் நடக்காததால் ட்விட்டரை விட்டு வெளியேறிய காயத்ரி ரகுராம்
Recommended Video

சென்னை: காயத்ரி ரகுராம் ட்விட்டரை விட்டு வெளியேறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு காயத்ரி ரகுராம் ட்விட்டரில் என்ன தெரிவித்தாலும் நெட்டிசன்கள் அவரை கலாய்த்தனர். தன்னை கலாய்த்தால் வழக்கு தொடர்வேன் என்று காயத்ரி மிரட்டியும் யாரும் கேட்கவில்லை.
இந்நிலையில் தமிழச்சியான தன்னை ஆதரிக்காமல் கேரளாவை சேர்ந்த ஓவியாவை தமிழர்கள் ஆதரித்ததை சொல்லிக் காட்டினார் காயத்ரி.
காயத்ரி
நான் கடந்த 25 நாட்களாக அமெரிக்காவில் உள்ளேன் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது நான் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளம் மற்றும் வாட்ஸ்ஆப்பில் பொய்யான தகவல் பரவியுள்ளது என்று காயத்ரி ட்வீட்டினார்.
காங்கிரஸ்
நான் பாஜகவை சேர்ந்தவள் என்பதால் என்னை குறி வைத்து தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என்று போட்டோஷாப் மீம் கிரியேட்டர்கள் அல்லது காங்கிரஸ் மீம் கிரியேட்டர்களை கேட்டுக் கொள்கிறேன். உங்களின் தவறான செய்தி என் குடும்பத்தார், நண்பர்களை காயப்படுத்துகிறது. உங்களுக்கும் குடும்பம் உண்டு என்றார் காயத்ரி.
புகார்
காங்கிரஸ் மீம் கிரியேட்டர்கள் என்னை குறி வைக்கிறார்கள். பெண்களின் பாதுகாப்புக்காக ஏதாவது செய்யுங்கள் ப்ளீஸ். தமிழக போலீசை எப்படி டேக் செய்வது. நான் அமெரிக்காவில் இருப்பதால் யாரை தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை என்று ட்வீட்டினார் காயத்ரி.
உண்மை
என் வாழ்க்கை முழுவதும் மக்களுக்கு சேவை செய்ய நினைத்தேன். ஆனால் அரசியல் அதை செய்ய விடாது. நான் உண்மையை பேசி, மீடியா உள்பட அனைவரிடமும் உண்மையாக இருக்க விரும்பினேன். மக்கள் உண்மையை ஏற்க தயாராக இல்லை. நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன். தமிழகம் பாதுகாப்பான கரங்களில் உள்ளது என்று நம்புகிறேன். கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று இன்று ட்வீட்டியுள்ளார் காயத்ரி.
குட்பை
ட்விட்டரை விட்டு வெளியேறுகிறேன். எனக்கு யாரும் ஆதரவு அளிக்காதபோது நானும் ஆதரவளிக்கப் போவது இல்லை. இது தான் என் கடைசி ட்வீட் என்று காயத்ரி ட்வீட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











