சவுந்தர்யா, உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறேன்..! - விருது பெற்ற மகளுக்கு ரஜினி வாழ்த்து

By Shankar

டெல்லி: கோச்சடையான் படம் பார்த்தேன். அதை உருவாக்கிய உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறேன் மகளே என்று வாழ்த்தியுள்ளார் அவர் தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கோச்சடையான் படத்தை மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவாக்கியதன் மூலம், இந்திய சினிமாவில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த சவுந்தர்யா ரஜினிக்கு என்டிடிவியின் சிறந்த இந்தியர் விருது நேற்று வழங்கப்பட்டது.

'I'm proud of you': Rajinikanth to Soundarya

நடிகர் ரன்பீர் கபூர் இந்த விருதினை அவருக்கு வழங்கினார். விருது வழங்கியதும் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்த்துச் செய்தியை ஒளிபரப்பினர்.

அதில், "கோச்சடையான் படத்தை நான் பார்த்தேன். பார்த்து முடித்ததும் என் மகளிடம், 'சவுந்தர்யா.. உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறேன்' என்றேன். நிச்சயம் அவருக்காக நம் நாடே பெருமைப்படும்," என்று கூறியுள்ளார்.

கோச்சடையான் படம் வரும் மே 9 -ம் தேதி 6 மொழிகளில், உலகமெங்கும் 6000 திரைகளில் (5000 தியேட்டர்கள்) வெளியாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 800 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X