மஞ்சு வாரியர் மேல கோபமே இல்லை... அவரோட சேர்ந்து கூட நடிப்பேன்... சொல்கிறார் முன்னாள் கணவர் திலீப்
கொச்சி: நடிகை மஞ்சு வாரியர் மீது எனக்கு கோபம் ஏதுமில்லை என்றும் அவருடன் சேர்ந்து கூட நடிப்பேன் என்றும் நடிகர் திலீப் சொன்னார்.
மலையாள ஹீரோ திலிப், நடிகை மஞ்சு வாரியரை கடந்த 1998 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் இருக்கிறார்.
இந்நிலையில் திலீப்பும் காவ்யா மாதவனும் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது.

விவகாரத்து
இதற்கிடையே நடிகை காவ்யா மாதவனுக்கு நிஷால் சந்திரா என்பவருடன் திருமணம் நடந்தது. பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதற்கிடையே, மஞ்சு வாரியர் நடிகர் திலீப்பை விவகாரத்து செய்தார். இது மலையாள சினிமா உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

நடிகை கடத்தல்
இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த மலையாள முன்னணி நடிகை ஒருவர், கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது.

திலீப் கைது
இந்தக் கடத்தலில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் கூலிப்படையை வைத்து கடத்தலில் அவர் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. திலீப் கைது செய்யப்பட்டார். கொச்சி ஆலுவா சிறையில் 85 நாட்கள் இருந்த திலீப் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.

காவ்யா மாதவன்
இதற்கிடையே நடிகர் திலீப்- நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நடிகர் திலீப் அளித்த பேட்டியில், நடிகை கடத்தல் வழக்கில் முக்கியமான விவரங்களை வெளியிட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவருடன் நடிப்பேன்
நடிகை கடத்தல் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதிகமான தகவல்களை தெரிவிக்க முடியாது என்ற திலீப், தனது முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் பற்றியும் சொன்னார். மஞ்சு மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை. அவருடன் நடிப்பதிலும் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. சரியான கதை அமைந்தால் அவருடன் நடிப்பேன் என்றார்.

கோபம் இல்லை
தனக்கு எதிராக உருவாக்கப்பட்ட பெண்கள் திரைப்படக் கூட்டமைப்பினர் மீது கோபம் இல்லை என்றும் சொன்னார். அவர்களும் என் சக நடிகர்களே... அவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் என்றார். மலையாள சினிமாவில் போதை மருந்துகள் பயன்படுத்தப்படுவது பற்றிய கேள்விக்கு அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார்.


Click it and Unblock the Notifications











