“இது பேய்ப்படம்-னு யாராவது சொன்னால் நடிப்பதையே நிறுத்தி விடுகிறேன்”.. பிரபல நடிகர் ஓப்பன் சவால்!

கண்ணாடி படத்தை யாராவது பேய்ப்படம் என்று சொன்னால் நடிப்பதையே விட்டு விடுவதாக சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

மீடியாவிடம் கெஞ்சிய கண்ணாடி பட நாயகன் | Sundeep Kishnan | Kannadi movie press meet

சென்னை: கண்ணாடி படத்தை யாராவது பேய்ப்படம் என்று கூறினால் நடிப்பதையே விட்டு விடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் சந்தீப் கிஷன்.

கார்த்திக் ராஜு இயக்கத்தில் சந்தீப் கிஷன், அன்யா சிங், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கண்ணாடி. இப்படத்தின் தெலுங்கு பதிப்பை சந்தீப் தான் தயாரிக்கிறார்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைப்பெற்றது. அப்போது பேசிய சந்தீப், படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமென யோசித்தால், படத்தில் நடிக்கவே பயமாக இருக்கிறது என்றார்.

இது குறித்து விழாவில் அவர் பேசியதாவது, "டீஸர் பார்த்த பலரும் நேர்மறையான கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் படம் வெளியாகும் என்ற நிலை இருக்கிறது. நான் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகின்றது.

பயம்:

பயம்:

நான் எனக்காக படம் நடிக்கவில்லை. பார்வையாளர்களுக்காக தான் நடிக்கிறேன். ஆனால் இப்பொழுது படம் நடிப்பது என்றால் பயமாக இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு படமும் வெளியிடுவதற்கு பெரும் போராட வேண்டியிருக்கிறது. இப்டத்திற்காகவும் ஒவ்வொருவரும் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

மாயவனுக்கு பாராட்டு:

மாயவனுக்கு பாராட்டு:

தரமான படமாக வரவேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்திருக்கிறோம். இப்படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே இப்படத்தை எடுத்திருக்கிறோம்.‘மாயவன்‘ படத்தை ஆன்லைனில் பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். இதன் பிறகு ‘கசடதபற' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்படம் வெளியாகும்போது எல்லோராலும் பேசும்படமாக இருக்கும்.

கதை மாற்றம்:

கதை மாற்றம்:

எல்லோரும் பேய் மற்றும் விலங்குகளை வைத்து படமெடுத்தால் வெற்றியாகும் என்றார்கள். ஆகையால் எந்த பின்னணியில் எடுத்தால் வெற்றியாகும் என்று கூறினாலும், அதை விடுத்து நான் எப்போதும் வித்தியாசமாகத் தான் நடிப்பேன் என்று கூறுவேன். இப்படத்தில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கதையின் அடிப்படை மாறும். மேலும், 2043 வருடத்திலிருந்து ஆரம்பிக்கும். எதிர்காலத்தில் ஆரம்பித்து நிகழ்காலத்தில் முடியும்.

பேய்ப்படம் அல்ல:

பேய்ப்படம் அல்ல:

இதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படத்தைத்தான் தயாரிக்க வேண்டும் என்று தோன்றியது. இப்படத்தைப் பார்த்து முடித்ததும் இது பேய் படம் என்று யாராவது கூறிவிட்டால் இனிமேல் நடிப்பதையே விட்டுவிடுகிறேன்", என அவர் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X