twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் இன்னும் சாகல, உசுரோட தான் இருக்கேன்: உளறிய டிரம்புக்கு அர்னால்டு பதில்

    By Siva
    |

    நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்நெக்கர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதை பார்த்த அர்னால்டு டிரம்புக்கு தக்க பதில் அளித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்நெக்கர் இறந்துவிட்டார். அவர் இறந்தபோது நான் அங்கிருந்தேன் என்று தெரிவித்தார்.

    Im still here: Arnold quips Trump

    அர்னால்டு உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்துவிட்டதாக டிரம்ப் தெரிவித்தார். அர்னால்டு பற்றி டிரம்ப் தெரிவித்தது குறித்து பத்திரிகையாளரான ஹன்டர் வாக்கர் ட்வீட் செய்தார்.

    அதை பார்த்த அர்னால்டு பதில் அளித்துள்ளார். அர்னால்டு தனது பதிலில் கூறியிருப்பதாவது,

    நான் இன்னும் இங்கு தான் இருக்கிறேன். வேண்டும் என்றால் வருமான வரி செலுத்தியதை பார்க்க விரும்புகிறீர்களா டிரம்ப் என்று தெரிவித்துள்ளார்.

    டிரம்ப் பேசியதை பார்த்த சிலரோ என்னாது அமெரிக்க அதிபர் டிரம்ப் அர்னால்டை கொலை செய்துவிட்டாரா என்று கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

    டிரம்புக்கும், அர்னால்டுக்கும் இடையே ஆகாது என்று பரவலாக பேசப்படும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குடியரசுக் கட்சியை சேர்ந்த அர்னால்டு டிரம்புக்கு வாக்களிக்க மாட்டேன் என்று கடந்த 2016ம் ஆண்டு தெரிவித்தார்.

    வந்துச்சா.. வந்துச்சா.. கவின் மீது லாஸ்லியாவுக்கு காதல் வந்துச்சா?! வந்துச்சா.. வந்துச்சா.. கவின் மீது லாஸ்லியாவுக்கு காதல் வந்துச்சா?!

    1983ம் ஆண்டு நான் இந்த நாட்டு குடிமகன் ஆனதில் இருந்து இதுவரை குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளேன். ஆனால் முதல் முறையாக நான் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கப் போவது இல்லை. அந்த வேட்பாளர் டிரம்ப் என்று அர்னால்டு அறிக்கை வெளியிட்டார். அதில் இருந்து டிரம்புக்கு அர்னால்டை கண்டாலே பிடிக்காமல் போய்விட்டது.

    இந்நிலையில் உயிருடன் இருக்கும் அர்னால்டு இறந்துவிட்டதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Hollywood actor Arnold Schwarzenegger said that I'm still here after US president Donald Trump declared him dead.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X